என்ன புதுசா கொரோனாசோம்னியா பிரச்சினையா? இதென்ன நோய்? அறிகுறிகள் & சிகிச்சை விவரங்கள்

3 July 2021, 9:59 am
Coronasomnia Definition, Symptoms, and Solutions
Quick Share

கொரோனா தொற்றின் காரணமாக உலக மக்களின் வாழ்க்கைமுறைகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இந்த எதிர்பாராத பேரழிவு நிகழ்வினால் மக்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயினால் தங்கள் வருமானங்களை இழந்து வாழ்வாதாரங்களை இழந்து மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் உலகின் பெரும்பாலான மக்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து தூக்கமின்மை பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தொற்றுநோயால் மக்களின் வாழ்க்கை முறையே மாறியது மட்டுமில்லாமல், ​​பெண்கள், கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக பணி செய்த தொழிலாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் ஆன்லைன் கல்வி பயிலும் மாணவர்கள் என பலரும் கொரோனாசோம்னியா பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனாசோம்னியா பிரச்சினையின்  என்னென்ன இதை எப்படி சரிசெய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொரோனாசோம்னியா – அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

கொரோனாசோம்னியா பிரச்சினையின் அறிகுறிகளைப் பொறுத்தவரை, தூங்குவதில் சிரமம், தூக்கமே வராமல் இருத்தல், தலைவலி, கவலை, நடு இரவில் தூக்கம் கெடுதல், உடல் அசதி, சோம்பல், மன அழுத்தம், மனகுழப்பம், கவனமின்மை, காரணமில்லா கோபம் போன்ற சிக்கல்கள் இருக்கலாம். பொதுவாக இந்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணம் தூக்கமின்மை தான்.  இந்த தூக்கமின்மைக்கான காரணங்கள் நிறைய உள்ளன அதை பற்றி அடுத்து பார்க்கலாம்.

கொரோனா பரவாமல் தடுக்க பல இடங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக  வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாலும், வேலைக்குச் செல்பவர்கள் வீட்டிலேயே இருந்து வேலைகளை பார்க்க வேண்டிய காரணத்தாலும், மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமே கல்வி கற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாலும் மக்களுக்கு ஒரு மாதிரியான மன இறுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் தூங்க முடியாமல் தூக்கமின்மை ஏற்படுகிறது. 

கொரோனா காரணமாக வாழ்க்கைமுறையில் திடீர் மாற்றங்கள் காரணமாக பலரும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. இணைய சிக்கல், சாதன கோளாறு போன்ற பிரச்சினைகளால் வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்கள் வேலையை முடிக்க முடியாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களால் மனச்சோர்வு ஏற்படுகிறது. 

கொரோனா ஊரடங்கின் காரணமாக இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் ஆன்லைனிலேயே இருக்கின்றனர். டிஜிட்டல் திரையையே பார்த்துக்கொண்டே இருப்பதாலும், கிளப்ஹவுஸ், வாட்ஸ்அப் போன்ற செயல்பாடுகளில் மூழ்கி கிடப்பதாலும் இரவில் தூங்காமல் தவிக்கின்றனர். 

கொரோனாசோம்னியா பிரச்சினைக்கு எதிராக போராட உதவும் சில குறிப்புகள் 

காஃபின் போன்ற நச்சுக்களை குடிப்பதை தவிர்த்து இளநீர், பழச்சாறுகள், செம்பருத்தி தேநீர், கொத்தமல்லி, சுக்கு, இஞ்சி தேநீர் போன்ற இயற்கை பானங்களைக் குடிப்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும். செயற்கை பானங்களைத் தவிர்ப்பது நல்லது. பழங்கள், காய்கறிகள், கீரைகள் எல்லாமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தற்போது பெரும்பாலான பணிகள் ஆன்லைல் மூலமே செய்யப்படுவதால், கணினிகள் மற்றும் ஸ்மார்ட் போன்களின் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. எனவே, கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் திரைகளை பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்ணை மூடி ஓய்வெடுத்து கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

சரியான நேரத்தில் பணிகளை முடித்துவிட்டு சரியான நேரத்தில் தூங்க வேண்டும். கண்ட நேரத்தில் சாப்பிடுவது வேலை செய்வது போன்ற பழக்கங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேலை செய்யும் அரை வெளிச்சமாக இருப்பது நல்லது.

காலை எழுந்ததும், அல்லது நேரம் கிடைக்கும் சமயத்தில் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இதையெல்லாம் செய்தாலே தூக்கமின்மை பிரச்சினை இல்லாமல் ஆரோக்யமாக இருக்கலாம்.

Views: - 291

0

0