அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சீரகம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்

24 May 2021, 12:26 pm
Cumin Seeds Benefits For Hair, Skin Health
Quick Share

சீரகம் நம் வீட்டு அஞ்சறைப் பெட்டிகளில் எப்போதும் இருக்கும் ஒரு பொருள். 100 கிராம் சீரக விதைகளில் 44 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 22 கிராம் கொழுப்பு மற்றும் 17 கிராம் புரதம் உள்ளது. 

இதில் வைட்டமின் A, தியாமின், நியாசின், வைட்டமின் B6, ஃபோலேட், வைட்டமின் E மற்றும் வைட்டமின் K போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் பொட்டாசியம், சோடியம், மாங்கனீசு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.

சீரக விதைகளில் ஆல்டிஹைட் கொழுப்புகள், அமினோ அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் கிளைகோசைடுகள் மற்றும் ஆவியாகும் எண்ணெய் ஆகியவை உள்ளன. இந்த சீரக எண்ணெயில் கியூமினால்டிஹைட் அதன் முக்கிய அங்கமாக உள்ளது. சீரகத்தில் உள்ள முக்கியமான செயலில் உள்ள சில சேர்மங்களில் கியூமினால்டிஹைட், லினாலூல், b-பினீன், 1,8-சினியோல், சஃப்ரானல் மற்றும் லிமோனீன் போன்றவையும் உள்ளது.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த சீரகத்தால் கிடைக்கும் சில நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சீரக தண்ணீர்: சுமார் 3 கிராம் சீரக விதைகளை எடுத்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுங்கள். அஜீரணத்திற்கு சிகிச்சையளிப்பதோடு உடல் வெப்பத்தை குறைப்பதற்கும் இந்த சீரக தண்ணீர் உதவியாக இருக்கும்.

சீரகம் மற்றும் ஓமம் நீர்: 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமம் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிட்டு குடித்தால், வாய்வு தொல்லை மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் மிக விரைவாக குணமாகும்.

சீரகம் தூள்: சீரகத்தை நான்றாக வறுத்து பொடி செய்துகொள்ள வேண்டும். இதனுடன் தயிர் உப்பு, மிளகு, வெள்ளரிக்காய் துண்டுகள், வெங்காயம், 1/4 தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். இதை சாப்பிட்டால் எடை இழப்புக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

கூந்தலுக்கு சீரக விதை நன்மைகள்: பாரம்பரியமாக, எண்ணெய் குளியலின் போது எண்ணெய் உடன் சீரகத்தையும் சேர்த்துக்கொள்வோம். சீரகம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் முடியை வலுப்படுத்தவும், உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்விக்கவும், கூந்தலுக்கு நல்ல பிரகாசத்தை அளிக்கவும் உதவும்.

சருமத்திற்கு சீரகம்: நாம் ஹேர் பேக்குகளில் சீரகம் சேர்க்கலாம், இது வெப்ப கொதிப்பு மற்றும் தடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவும். ஃபேஸ் பேக் தயாரிக்க, பீசன், மஞ்சள் தூள் மற்றும் தேன் ஆகியவற்றில் சீரகம் சேர்த்து, பேஸ்ட் செய்து தடவவும். அது உலரக் காத்திருந்து பின்னர் கழுவ வேண்டும்.

Views: - 206

3

0