கருகருவென பார்ப்போரை கவரச் செய்யும் கருநிறக் கூந்தலைப் பெற உதவும் ஹேர் மாஸ்க் டிப்ஸ்

Author: Dhivagar
4 August 2021, 4:58 pm
Homemade Yogurt Hair Masks That Accelerate Hair Growth And Repair Damaged Hair
Quick Share

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது எப்படி உங்களை மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவையின்றி பார்த்துக்கொள்கிறதோ அதேபோல், தயிரும் உங்களுக்கு பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்கி ஆரோக்கியம் தர வல்லது! பாலில் இருந்து உருவாகும் இந்த ஊட்டச்சத்து நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் E, புரதங்கள் மற்றும் லாக்டிக் அமிலம் ஆகியவை இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இது மிகவும் ஆரோக்கியமான உணவாக உள்ளது. இது உடல் அமைப்பிற்கு குளிர்ச்சி தருவது மட்டுமல்லாமல், செரிமான பிரச்சினைகளையும் போக்கும். தயிரை உட்கொள்வதாள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகி உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அழகு பண்புகளையும் தயிர் கொண்டுள்ளது. இந்த பால் தயாரிப்பு அழகான, போஷாக்கான கூந்தலை வழங்க அனைத்து முடி பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராடும் பண்பைக் கொண்டது. முடி வளர்ச்சியை திறம்பட ஊக்குவித்து அதை வலுப்படுத்தும் ஆற்றல் தயிருக்கு உண்டு.

தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஹேர் மாஸ்க்

உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக உதிராமல் பாதுகாப்பது உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த மிகவும் அவசியம். தயிரில் வைட்டமின் B5 மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துகாணப்படுவதால் தயிர் முடி வளர்ச்சியை அதிகரிக்க ஒரு சிறந்த டானிக் ஆகவும் செயல்படும். அதே போல ஆலிவ் எண்ணெயும் ஆரோக்கிய குணங்கள் நிறைந்தது.

செயல்முறை

1 கப் தயிருடன் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பிறகு, தயிர்-எண்ணெய் ஹேர் மாஸ்கை உங்கள் ஈரமான கூந்தலில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். அடுத்து, கூந்தலை குளிர்ந்த அல்லது சாதாரண நீரில் கழுவவும். இதை அடுத்து உங்கள் தலைமுடியை எலுமிச்சை சாறுடன் கழுவவும். மாதத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது இந்த செயல்முறை செய்யவும். இதை தொடர்ந்துச் செய்து வர உங்கள் கூந்தல் கருகருவென போஷாக்குடன் வளரும்.

Views: - 693

0

0