ஆரோக்கியமான சருமம் வேண்டும்னா… இனிமேல் இப்படி படுத்து தூங்குங்க!!!

6 April 2021, 3:00 pm
Quick Share

நாம் எல்லோருமே  இரவில் தூங்கும்போது ஒரு குறிப்பிட்ட வழியில் படுத்து உறங்குவோம். அந்த வழியானது நம்  உடலுக்கு வசதியாக இருக்கும் போது, ​​அது நம்  முகத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம்.  ஒரு மோசமான தூக்க தோரணை உங்கள் முகத்தில் சுருக்கங்களையும் முக்கிய கோடுகளையும் ஏற்படுத்தக்கூடும். மேலும் சில நீண்டகால சேதங்களையும் கூட விட்டு விடலாம். 

ஒருக்களித்து தூங்குவது சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது?

ஒரு நபர் ஒரு பக்கமாக ஒருக்களித்து தூங்கும்போது அது  வசதியாக இருக்கும் என்றாலும், நம் முகத்தை தொடர்ந்து படுக்கைக்குள் தேய்க்க நேரிடும். இது நம் முகத்தில் தலையணையை அழுத்தும். இதன் விளைவாக  கட்டமைக்கப்பட்ட கோடுகளை உருவாகலாம். இதனை தடுக்க முடிந்த வரையில் இரு பக்கத்திலும் திரும்பி படுப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். மேலும், படுத்து உறங்க ஒரு பட்டு தலையணையை வாங்கி கொள்ளவும். இது தோல் ஓய்வெடுக்க மிகவும் மென்மையான மேற்பரப்பை வழங்குகிறது.

வயிற்றை தரையில் வைத்து குப்புற  தூங்கலாமா?

சிலர் குப்புற படுத்து தூங்க விரும்புகிறார்கள். ஆனால் இது உங்கள் கண்களுக்குக் கீழே திரவத்தை வரவழைத்து  அவற்றை வீங்க வைத்துவிடும். மற்றொரு விஷயம்  என்னவென்றால், உங்கள் தோல் தலையணையில் அழுந்துவதை நீங்கள் உணரலாம். உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால், உங்கள் முகத்தில் இருக்கும்  எண்ணெய்களில் ஒரு பகுதியை உங்கள் தலையணையில் படலாம். இது உங்கள் துளைகளைத் தடுக்கும். 

மல்லாந்து ஓய்வெடுப்பது நல்லதா?

இது ஒரு சிறந்த ஓய்வு நிலை. இந்த நிலை உடலுக்கு எந்த விதத்திலும் அழுத்தத்தை  கொடுக்காது. இது ஒருக்களித்தோ அல்லது குப்புற தூங்குவதைப் போலன்றி, உங்கள் கண்களைச் சுற்றி திரவம் சேகரிக்காது. மேலும், உங்கள் முகம் தலையணையை தொடாது.

Views: - 5

0

0