அடிக்கடி நெட்டி முறிக்கும் பழக்கம் இருக்கா… உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!!

1 May 2021, 8:32 pm
Quick Share

கைகளை நெட்டி முறிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இது ஒரு நிவாரணம் அளிப்பதாக  நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்த பழக்கம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அழிக்கக்கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆமாம், வீட்டிலுள்ள வயதானவர்கள் நீங்கள் கைகளை நெட்டி முறிக்கும் போது உங்களை எச்சரிக்கை செய்வதை நீங்கள் கவனித்து இருக்கலாம். ஏனென்றால் இது ஒரு மோசமான பழக்கம் ஆகும். இது  உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை நிறைய பாதிக்கும்.

நம்மில் பெரும்பாலோர் நெட்டி முறிக்கும் அந்த ஒலியை கேட்ட பின் நிம்மதி அடைகிறோம். ஒரு சிலருக்கு இது ஒரு புதுவித புத்துணர்ச்சியை அளிக்கிறது. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், இது உங்களுக்கு ஏன் மோசமானது என்பதை  இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வீர்கள்.

1. மூட்டு வலி: இதைச் செய்வதன் மூலம் உங்கள் வலி குறைகிறது என்று நீங்கள் நினைத்தால் அது உண்மை கிடையாது.  அதற்கு பதிலாக, உங்கள் விரல்களிலும் மணிக்கட்டிலும் அதிக வலியை ஏற்படுத்துகிறீர்கள்.

2. வீக்கம்: 

பொதுவாக நெட்டி முறிக்கும் போது  வீக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

3. பலவீனமான விரல்கள்: 

அடிக்கடி நெட்டி முறிப்பது உங்கள் மூட்டுகளுக்கு இடையில் குழிகளை உருவாக்குகிறது. இதனால் விரல்கள் பலவீனமாக மாறலாம். 

4. காலப்போக்கில் கைகளில் செயல்பாடு குறைவு ஏற்படுகிறது: 

இது பெரும்பாலும் கடுமையான நிகழ்வுகளில் ஏற்படுகிறது.

5. குருத்தெலும்பு தடித்து போகலாம்.

6. வலி மற்றும் வீக்கம்

7. எலும்பு வடிவத்தை மாற்றுகிறது

8. வளைந்த விரல்களை உண்டாக்குகிறது.

எனவே நண்பர்களே… எப்போதாவது நெட்டி முறிப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.  அடிக்கடி இதனை செய்து வந்தால் மட்டுமே சிக்கல் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Views: - 134

1

0