காலையில் இந்த காபியை மட்டும் குடிங்க… ஒரே மாதத்தில் அசால்டா ஐந்து கிலோ எடையை குறைத்து விடலாம்!!!

28 August 2020, 7:05 pm
Quick Share

காலை எழுந்தவுடன் காபி குடித்தால் தான் நாளே போகும் என்று சொல்பவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட காபியை ஆரோக்கியமானதாக மாற்றி தொப்பையை குறைக்க பயன்படுத்தும் ஒரு செயல்முறையை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இதனை பதினைந்து நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நிச்சயமாக ஐந்து கிலோ வரை உங்கள் எடையை குறைக்கலாம். 

இதனை செய்வதற்கு நீங்கள் இன்ஸ்டன்ட் காபி பொடி அல்லது பில்டர் காபி தூள் என எதுவாக இருந்தாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இன்ஸ்டன்ட் காபி பொடியாக இருந்தால் அப்படியே எடுத்து கொள்ளலாம். அதுவே பில்டர் காபியாக இருந்தால் அதனை வடிகட்டிய சாற்றை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அடுத்ததாக இதனை செய்வதற்கு நமக்கு ஒரு பட்டை துண்டு தேவைப்படும். 

பட்டை துண்டினை ஒரு உரலில் போட்டு இடித்து எடுத்து கொள்ளவும். காபி தயாரிக்க ஒரு கிளாஸ் ஒன்று எடுத்து அதில் 1/2 தேக்கரண்டி அளவு காபி தூள் சேர்த்து கொள்ளுங்கள். அடுத்ததாக 1/4 தேக்கரண்டிக்கும் குறைவாகவே பட்டை தூள் சேர்க்கவும். கூடவே ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். 

இனிப்பு சுவைக்காக 1 1/2 – 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கொள்ளுங்கள். வெள்ளை சர்க்கரை நிச்சயமாக பயன்படுத்த கூடாது. பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனோடு வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். இதில் நாம் தேன் சேர்த்துள்ளதால் சூடான பால் சேர்க்க கூடாது. 

இந்த காபியை காலையில் வெறும் வயிற்றில் வழக்கம் போல நீங்கள் அருந்தலாம். இதனை அதிக அளவில் கூட செய்து குளிர் சாதன பெட்டியில் சேகரித்து வைத்து கொள்ளலாம். ஆனால் பால் அல்லது தண்ணீர் சேர்ப்பதற்கு முன்பு பொருட்கள் அனைத்தையும் கலந்து ஈரப்பதம் இல்லாமல் காற்று உள்ளே நுழையாத ஒரு பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும். 

இந்த காபியை தொடர்ந்து பதினைந்து நாட்கள் குடித்தாலே உங்கள் உடல் எடையில் நல்ல ஒரு மாற்றம் தெரியும். காபி பொடியில் உள்ள கஃபைன் என்ற வேதிப்பொருள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவும். மேலும் பட்டையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மையும் உள்ளது. அதே போல தேங்காய் எண்ணெய் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. நிச்சயமாக இந்த குறிப்பை பின்பற்றி பயனடையுங்கள்.

Views: - 0 View

0

0