வறட்டு இருமலை நொடியில் போக்கும் எளிமையான வீட்டு வைத்தியம்!!!

Author: Hemalatha Ramkumar
24 November 2021, 9:16 am
Quick Share

குளிர்காலம் வந்தாச்சு.
இது நமக்கு பிடித்த ஒரு சீசனாக இருந்தாலும், இது தொண்டை புண் மற்றும் பல ஒவ்வாமை உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, அதிகரித்து வரும் மாசுபாடு நம்மை பயமுறுத்துகிறது. காற்றின் தர நிலை (AQI) ஆபத்தான உயர் மட்டத்தை எட்டுகிறது.

உங்களில் பெரும்பாலானோர் கடந்த சில வாரங்களாக தொண்டை வலியை அனுபவித்திருக்கலாம். இதனை சமாளிக்க நாம் சிரப் மற்றும் மாத்திரைகள் போன்றவற்றை எடுப்போம். ஆனால் இதனை இயற்கையான பொருட்களைக் கொண்டே எளிதில் சமாளிக்கலாம்.

★கிராம்பு:
கிராம்பு தொண்டை புண் ஆற்றுவதற்கு மிகவும் விருப்பமான வீட்டு வைத்தியம் ஆகும். ஒரு துண்டு கிராம்பு மற்றும் சிறிது கல் உப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளவும். இந்த கலவையானது வீக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது. எந்தவொரு தொண்டை வலியையும் குறுகிய காலத்திலே அகற்ற இது உதவும்.

★அதிமதுரம்:
அதிமதுரத்தை மென்று சாப்பிடுவது தொண்டை வலியை சமாளிக்க மற்றொரு சிறந்த வழியாகும். அதிமதுரத்தைப் பயன்படுத்தியும் தேநீர் தயாரிக்கலாம். இதற்கு கொதிக்கும் நீரில் சில அதிமதுரத்தை சேர்க்க வேண்டியது தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, தேநீரை வடிகட்டி, அதில் சிறிது தேன் சேர்த்து பருகவும்.

★கருப்பு ஏலக்காய்:
இது கேள்விப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் இது உங்கள் தொண்டை வலிக்கு அதிசயங்களைச் செய்யும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் குளிர்காலத்தில் வறட்டு இருமல் மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவும்.

★தேன் மற்றும் இஞ்சி:
வெந்நீரில் இஞ்சி மற்றும் தேன் கலந்து குடிப்பது இருமலைத் தணிக்கும். தொண்டையை ஆற்றும் என்பதால் இஞ்சி மற்றும் தேன் கொண்ட இந்த கலவை நிச்சயமாக உங்களுக்கு உதவும்.

★வெதுவெதுப்பான நீரை பருகவும்:
தொண்டை வலியை சமாளிக்க நீரேற்றம் முக்கியமானது. குளிர்காலத்தில் நமது நீர் நுகர்வு வெகுவாகக் குறைந்தாலும், தொண்டை ஈரமாக இருக்க, வெதுவெதுப்பான நீரை தொடர்ந்து பருகுவது அவசியம். இது தொண்டை நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. அதே நேரத்தில், வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதையும் தடுக்கிறது.

Views: - 199

0

0

Leave a Reply