ஒரே வாரத்தில் இயற்கையான முறையில் நரைமுடியை போக்கும் முட்டையின் மஞ்சள் கரு எண்ணெய்!!!!

13 November 2020, 2:44 pm
Quick Share

பொதுவாக கூந்தல் வளர்ச்சிக்கும் அதன் ஆரோக்கியத்திற்கும் முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தி வருகிறார்கள். தலைமுடியில் உள்ள வறட்சியினால் ஏற்படும் முடி உதிர்வை முட்டையின் வெள்ளை கரு தடுக்கிறது. ஆனால் இன்று நாம் பயன்படுத்தப் போவது முட்டையின் மஞ்சள் கரு. இன்றைய நவீன உலகில் ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை முறை காரணமாக இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்துவிடுகிறது. 

இந்த நரைமுடியை மறைக்க டையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த டையானது இரசாயனங்களால் ஆனது என்பதால் தலைமுடிக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளை தருகிறது. இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க ஒரு அற்புதமான தீர்வை தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். 

நரைமுடியை போக்க முட்டையின் மஞ்சள் கருவை பயன்படுத்தி தலைமுடி எண்ணெய் எப்படி செய்வது என இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணெயை இரண்டு விதமாக நம் வீட்டில் செய்யலாம். இதனை செய்வதற்கு முதலில் ஒரு முட்டையை வேக வைத்து அதிலுள்ள மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளுங்கள். 

தனியாக எடுத்த மஞ்சள் கருவை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு கிண்ணத்தில் வைக்கவும். இதனோடு 1/4 கப் தேங்காய் எண்ணெயை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்து  தண்ணீர் ஊற்றவும். இந்த தண்ணீர் மீது நாம் கலந்து வைத்துள்ள தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் கரு கலவையை வைக்கவும். 

இதனை டபுள் பாய்லர் முறை என்று அழைப்பார்கள். எண்ணெய் நன்றாக கொதித்ததும் அதனை ஆற வைத்து பிறகு வடிகட்டி எடுத்து கொள்ளலாம். இரண்டாவது விதத்தில் ஒரு கடாயில் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் போட்டு வதக்கவும். மஞ்சள் கரு கரைந்து கருப்பாக கருகும் வரை கலந்து விடவும். 

அது கருப்பாக மாறியதும் ஆலிவ் எண்ணெயை ஊற்றி இறக்கி வைக்கவும். இது நன்றாக ஆறிய பின் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இதில் மஞ்சள் கரு சேர்த்துள்ளதால் கெட்ட வாசனை வரும் என்ற பயமே வேண்டாம். இப்போது இந்த எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது என பார்க்கலாம். 

உங்கள் தலைமுடியை இரு பாகமாக பிரித்து கொள்ளுங்கள். நாம் தயாரித்து வைத்த எண்ணெயை முடி முழுவதிலும் தடவி பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பிறகு நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பூ பயன்படுத்தி முடியை அலசி கொள்ளுங்கள். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர சீக்கிரமே நரைமுடி கருமையாக மாறுவதை நீங்கள் பார்க்கலாம்.

Views: - 41

0

0