தினமும் ஒரு கிளாஸ் மது அருந்தினால் கூட பேராபத்து தான்!!!
19 January 2021, 8:32 pmஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் மது அருந்துவது மட்டுமே கூட உங்கள் இதயத் துடிப்பை அசாதாரணமாக உயர்த்தக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது. ஆய்வின் படி, அளவுடன் மது குடித்தாலும் ஆபத்தானது சீராக அதிகரித்தது. ஒரு நாளைக்கு ஒரு சிறிய கிளாஸ் மது அருந்தியவர்களுக்கு 16 சதவீதமும், நான்கு கிளாஸூக்கு மேல் குடித்தவர்களுக்கு 47 சதவீதமாக அதிகரித்தது.
குறைந்த மற்றும் மிதமான மது அருந்துதல் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial fibrillation) அபாயத்திற்கு வழிவகுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பலருக்கு வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய பிறகு இரவு ஒரு கிளாஸ் மது அருந்தும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் ஒரு அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு 12 கிராம் எத்தனால் உட்கொண்டவர்கள் – 120 மில்லி கிளாஸ் ஒயின், 330 மில்லி பீர் அல்லது 40 மில்லி ஸ்பிரிட் குடித்தவர்களுக்கு சமமானவர்கள்.
தினமும் ஒரு கிளாஸ் மது உட்கொள்வது ஒழுங்கற்ற இதய துடிப்பு அல்லது இதய துடிப்பு அபாயத்தை அதிகரிக்கும். ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் என்பது ஒழுங்கற்ற – மற்றும் பெரும்பாலும் விரைவான – இதயத் துடிப்பால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை ஆகும். இது தலைச்சுற்றல் மற்றும் படபடப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று அறிக்கை கூறுகிறது.
இது மக்களை பக்கவாதத்திற்கு ஆளாக்கும். ஒரு சிறிய கிளாஸ் ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உருவாகும் ஆபத்து குறைவு தான் என்றாலும் அவர்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். விஷயம் என்னவென்றால், மற்ற இருதய நோய்களுக்கு மாறாக, குறைந்த மற்றும் மிதமான ஆல்கஹால் கூட ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அபாயத்திற்கு வழிவகுக்கிறது.
ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் பற்றிய மோசமான விஷயங்களில் ஒன்று, இது அறிகுறியற்றது மற்றும் பக்கவாதம் போன்ற பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
0
0