வியக்கத்தக்க நன்மைகள் அடங்கிய இந்த இயற்கை களிமண் பற்றி நீங்கள் அறிந்திடாத உண்மைகள்…!!!

27 November 2020, 7:24 pm
Quick Share

முல்தானி மெட்டி பற்றி நிச்சயம் நீங்கள் கேள்பட்டு இருப்பீர்கள். பலர் அதை பயன்படுத்தியும் இருக்கலாம். முல்தானி மெட்டி ஃபுல்லர்ஸ் எர்த் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அழகு பராமரிப்பு வழக்கத்தில் பல நன்மைகளை கொண்டதாக முல்தானி மெட்டி விளங்குகிறது. முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்திற்கு ஒரு தெளிவை தருகிறது. மேலும் முகத்தில் உண்டாகும் பருக்களையும் நீக்குகிறது. 

முல்தானி மெட்டியில் மெக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட் டாலமைட் உள்பட பல கனிமங்கள் உள்ளன. முல்தானி மெட்டியை அனைத்து வகை சருமம் கொண்டவர்களும் பயன்படுத்தலாம். பல வகையான தோல் பிரச்சனைகளுக்கு முல்தானி மெட்டி நல்ல ஒரு தீர்வாக அமைகிறது. இப்போது முல்தானி மெட்டியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம். 

1. அழற்சியை குறைக்கிறது:

குளிரூட்டும் தன்மை கொண்ட முல்தானி மெட்டி வீக்கத்தை குறைக்க உதவும். இதனால் சருமம் பொலிவாகிறது. 

2. இரத்த ஓட்டம் மேம்படுகிறது:

முல்தானி மெட்டி உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலமாக இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இரத்த ஓட்டம் மேம்படுவதால் இறந்த அணுக்கள் எளிதில் அகற்றப்படுகின்றன. 

3. பிக்மென்டேஷனை குறைக்கிறது:

வெள்ளை சருமம் கொண்டவர்கள் வெயிலில் சென்று வந்தாலே சன் டேன் காரணமாக முகம் கருமையாகி விடும். இதற்கு முல்தானி மெட்டியோடு இளநீரை கலந்து முகத்தில் தடவி வர கருமை நீங்கி முகம் பளபளப்பாகும். 

4. கிருமி நாசினி:

முல்தானி மெட்டி ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. ஆன்டிசெப்டிக் பண்புகளை கொண்ட முல்தானி மெட்டி காயங்கள் மற்றும் வெட்டுகளில் உள்ள கிருமிகளை நீக்கி காயங்களை விரைவில் குணமடைய செய்கிறது. 

5. ஒவ்வாமையை போக்குகிறது:

ஒவ்வாமை அல்லது தொற்று இருப்பவர்கள் எந்த ஒரு பயமும் இன்றி முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து பூசி வர சீக்கிரமே சரியாகி விடும். 

6. தழும்புகள் மறைய:

தீக்காயங்கள், வெட்டு போன்றவைகளால் ஏற்பட்ட தழும்புகளுக்கு முல்தானி மெட்டி ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. முல்தானி மெட்டியோடு கேரட் பல்ப், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலந்து தழும்புகளில் பூசி இருபது நிமிடங்கள் விட்டு விட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இதனை தொடர்ந்து பூசி வர நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம். 

இவ்வளவு நன்மைகள் முல்தானி மெட்டியில் இருப்பதை கண்டு ஆச்சரியமாக உள்ளதா… எளிதாக கிடைக்கும் இந்த முல்தானி மெட்டியை நீங்கள் பயன்படுத்தி பலன் அடையுங்கள். 

Views: - 0

0

0