COVID-19: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மூலிகைகளின் விவரங்கள்

11 June 2021, 8:53 pm
few herbs that will help your body produce more ojas
Quick Share

தீவிரமாக கொரோனா தொற்று பரவி வரும் இந்த வேளையில் நோயெதிர்ப்பு சக்தியும், மன தைரியமும் இருந்தாலே பிழைத்துவிடலாம்.  மனதைரியம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெளியிருந்து தான் உணவுகள் மூலமாக அதிகரிக்க வேண்டும்.  அதற்கு சில முக்கியமான மூலிகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். என்ன மாதிரியான மூலிகைகளை எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. முருங்கைக்காய்

முருங்கைக்காய் அன்றாடம் நம் அருகில் இருக்கும் கடைகளிலேயே கிடைக்கும் ஒரு மூலிகையாகும், இது பல உடல்நல சிக்கல்களைத் தடுத்து நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த உதவியாக இருக்கும். COVID-19 தொற்றுநோய் பரவி வரும் இந்த வேளையில், ​​நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சத்துக்களை விட முருங்கைக்காயில் இருக்கும் சத்துக்கள் அதிகம். வைட்டமின் C ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு நம் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும்.

அதுமட்டுமில்லை, உங்கள் செல்கள், தசைகள், திசுக்களை வலுப்படுத்தும் மற்றும் உங்கள் உடல் குணமடைய உதவும் வேறு சில முக்கிய ஊட்டச்சத்துக்களும் முருங்கைக்காயில் உள்ளது. பொட்டாசியம், இரும்பு, கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ள முருங்கையை நாம் தவிர்க்காமல் எடுத்துக்கொள்வது நல்லது.

2. வேம்பு

பழங்காலத்தில் இருந்தே, வேம்பு மருத்துவ குணம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஒரு மூலிகையாகவும் உள்ளது. தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உடலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, அதன் வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

வேம்பு உங்கள் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இது நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் இரத்தத்தை சுத்திகரிக்கிறது மற்றும் இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

3. துளசி

துளசி என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் அத்தியாவசிய மூலிகைகளில் ஒன்றாகும். துளசி ஒரு சக்திவாய்ந்த கிருமி நாசினியாகும். இதில் பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால், கிருமிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உங்கள் உடலில் நுழைந்த பிறகு அவற்றைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்க இது உதவும்.

காலையில் ஒரு சில துளசி இலைகளை முதலில் மென்று சாப்பிடுங்கள். பின் துளசி இலைகளை வேகவைத்த தேநீரை அருந்துங்கள். இதனால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும்.

4. அஸ்வகந்தா

அஸ்வகந்தா ஒரு அடாப்டோஜென் என்று சொல்வார்கள் அதாவது இது மன அழுத்தத்தை குறைக்கும். மன அழுத்தம் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து, உடலை வைரஸ் தொற்றுநோய்களால் பாதிக்கச் செய்கிறது. இந்த தொற்றுநோய் சமயத்தில் அஸ்வகந்தாவை உட்கொள்வது மிகவும் நல்லது, இது கொரோனா வைரஸ் தொற்றுநோயை பரவும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

5. திரிபாலா

திரிபாலாவில் ஹரிதகி, பிபிதாக்கி மற்றும் அம்லா ஆகிய மூன்று பழங்களின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது வைட்டமின் C மற்றும் வைட்டமின் A போன்ற சத்துக்களால் நிரம்பியுள்ளது. இவை இரண்டும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. திரிபாலாவுடன் உங்கள் நாளைத் தொடங்கி ஆரோக்கியமாக இருங்கள்.

Views: - 60

0

0

Leave a Reply