இந்த ஒரு ஜூஸ் போதும்… இரண்டே வாரத்தில் உடல் எடையை அசால்ட்டாக குறைத்து விடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
24 October 2021, 9:34 am
Quick Share

உடல் எடையைக் குறைக்க பலரும் பல விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கு வேலை செய்யும் ஒன்று இன்னொருவருக்கு வேலை செய்யாது. ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் ஒரு தீர்வு அனைவருக்கும் உதவும். உடல் எடையை குறைக்க அத்திப்பழச்சாறு பெரும் பங்கு வகிக்கிறது. அத்தியை பழமாக சாப்பிடுவதைக் காட்டிலும் அதனை ஜூஸாக அடித்து குடிப்பது உடல் எடையை குறைக்க பெருமளவில் உதவும். இப்போது அத்திப்பழ ஜூஸ் எப்படி செய்வது என்பதை காணலாம்.

தேவையான பொருட்கள்:
அத்திப்பழம்- 1/4 கிலோ
இஞ்சி- ஒரு துண்டு
தேன்- ஒரு தேக்கரண்டி
பால்- 1கப்
நாட்டுச் சர்க்கரை- தேவையான அளவு

செய்முறை:
*முதலில் அத்திப்பழத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

*ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் அத்திப்பழத்தை சேர்க்கவும்.

*இதனோடு நாட்டுச் சர்க்கரை, பால், தேன் மற்றும் இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

*அரைத்த ஜூஸை ஒரு டம்ளருக்கு மாற்றி ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகலாம்.

Views: - 275

0

0