பெண்களின் கூந்தல் ஆரோக்கியத்துடன் கருகருவென நீளமாக வளர உதவும் உணவு பொருட்களின் பட்டியல்

Author: Dhivagar
10 September 2021, 11:43 am
food items that are great for hair growth
Quick Share

உங்கள் உணவு உங்கள் முடி உட்பட உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் வழங்க மிகவும் முக்கியமானது.

முடி ஆரோக்கியமாக வளர்வதற்கு, நீங்கள் அன்றாடம் உண்ணும் ஆரோக்கியமான உணவும் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும். 

நீங்கள் உண்ணும் அனைத்தும் உங்கள் முடியின் வளர்ச்சி, வலிமை மற்றும் அளவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

எனவே, இன்று இந்த பதிவில், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில உணவு பொருட்களைக் குறித்து பார்ப்போம்.

பெர்ரி பழங்கள்

 • ஸ்டராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்கள் வைட்டமின் C ஊட்டச்சத்தால் நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க மிகவும் அவசியம் தேவைப்படும் ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும்.
 • ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும் இந்த வைட்டமின், கொலாஜன் உற்பத்தி மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சுதலுக்கு மிகவும் முக்கியமானது. முடி நீளமாகி வளர மிகவும் முக்கியமானது.
 • இது தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளின் சேதத்திலிருந்து முடியின் வேர்களைப் பாதுகாக்க மிகவும் உதவியாக இருக்கும்.
 • பெர்ரி பழங்கள் மட்டுமல்லாது, வைட்டமின் C நிறைந்த அனைத்து உணவு பொருட்களும் முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தயிர்

 • நம் உடலின் கட்டுமான அமைப்புக்கு மிகவும் முக்கியமானது புரதச்சத்து தான். இதனால் தான், அனைத்து கெரட்டின் முடி சிகிச்சைகளிலும் இந்த ஊட்டச்சத்து என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
 • முடி வளர்ச்சிக்கு புரதங்களை உட்கொள்வது மிகவும் முக்கியம் என்பதால், புரதம் நிறைந்த உணவுகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். புரதம் அதிகம் நிறைந்த தயிரை தவறாமல் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 • இந்த தயிரில் வைட்டமின் B5 உள்ளது, இது பாந்தோதெனிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பல முடி பராமரிப்பு பொருட்களிலும் இது ஒரு முக்கியமான பொதுவான மூலப்பொருள் ஆக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பச்சை கீரை மற்றும் காய்கறிகள்

 • அடர் பச்சை காய்கறிகள், குறிப்பாக கீரை மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவை அனைத்தும் அற்புதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
 • இந்த காய்கறிகளில் வைட்டமின் A, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலேட், வைட்டமின் C மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 
 • நம் உச்சந்தலையின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 • உதாரணமாக, வைட்டமின் A சரும சுரப்பிகள் சருமத்தில் செபம் உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த எண்ணெய் பொருள் முடியை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உச்சந்தலையை ஈரப்பதப்படுத்த உதவுகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

 • சரியான ஊட்டச்சத்துக்காக, உங்கள் தலைமுடிக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் அவசியம். நம் உடலால் இந்த ஆரோக்கியமான கொழுப்புகளை உற்பத்தி செய்ய முடியாது என்பதால், அவற்றை உங்கள் உணவில் இருந்து பெற வேண்டும்.
 • ஒமேகா-3 இன் முக்கிய ஆதாரங்கள் மீன் மற்றும் பிற விலங்கு இறைச்சி பொருட்கள் என்றாலும், பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற போன்றவற்றிலிருந்தும் தேவையான அளவைப் பெற முடியும்.
 • இந்த உணவுகள் உங்கள் தலைமுடியை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும்.

வைட்டமின் நிறைந்த காய்கறிகள்

 • உங்கள் உணவில் வைட்டமின் A குறைபாடு ஏற்பட்டால், தலையில் பொடுகு, உச்சந்தலை வறட்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
 • வைட்டமின் A இல்லாமல் உங்கள் உடலில் உள்ள செல்கள் சரியாக செயல்பட முடியாது என்பதால் இவை நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. கேரட் சிறந்த வைட்டமின் A ஆதாரங்களில் மிகவும் முக்கியமானது.
 • இந்த வைட்டமின் A வுக்கான மற்ற முக்கியமான ஆதாரங்களில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, பூசணி மற்றும் மாம்பழங்கள் ஆகியவை அடங்கும்.

Views: - 265

0

0