உடல் சூட்டை அதிகரிக்கும் சில உணவு வகைகள்!!!

Author: Hemalatha Ramkumar
30 January 2023, 1:51 pm
Quick Share

பொதுவாக கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவு ஜீரணிக்க நேரம் எடுக்கும். அதனால் உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. ஆகவே உடல் சூட்டை குறைக்க நினைக்கும் நபர்கள் குறைவாக சாப்பிட வேண்டிய சில உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

வேர் காய்கறிகள்:
செரிமானத்தின் போது வேர் காய்கறிகளுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. இது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் மற்றும் டர்னிப் போன்ற வேர் காய்கறிகள் உடலில் சூட்டை உண்டாக்கும்.

கொட்டைகள்:
வேர்க்கடலை, பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் பேரிச்சம்பழம் போன்ற சில பருப்புகளும் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இந்த கொட்டைகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துகிறது மற்றும் உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது.

பழங்கள்:
தேங்காய், ஆப்பிள் போன்ற பழங்களில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது மற்றும் நமது வயிறு அவற்றை ஜீரணிக்க நேரம் எடுக்கும். இது வெப்பத்தை உருவாக்கி உங்களை வெப்பமாக வைத்திருக்கும்.

முட்டை மற்றும் கோழி:
முட்டை மற்றும் கோழி இரண்டிலும் அதிக அளவு புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதனை ஜீரணிப்பது உடலுக்கு கடினமாக இருக்கும். எனவே இது உங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கிறது.

மூலிகைகள் மற்றும் மசாலா:
பூண்டு, கருப்பு மிளகு, இஞ்சி போன்ற பொதுவான மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களும் உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்வதற்கு காரணமாகின்றன. இந்த மசாலாப் பொருட்கள் செரிக்கப்படும் போது உங்கள் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும்.

Views: - 1279

0

0