காய்ச்சல் இருக்கும்போது என்னலாம் சாப்பிடலாம்? சீக்கிரமா காய்ச்சல் குறைய என்ன செய்யனும்?

6 July 2021, 11:12 am
foods to be taken during fever
Quick Share

நம் உடலின் வெப்பநிலை எப்போதும் சீராக இருக்க வேண்டும். அதற்கேற்றவாறு தான் நம் உடல் உறுப்புகள் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு வேலைச் செய்யும். அப்படி உடல் உறுப்புகள் சீராக வேலைச் செய்யும்போது தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் ஏதேனும் வெளிப்புற தொற்றுகளின் காரணமாக வெப்பநிலை அதிகரிக்கும்போது அது காய்ச்சலாக மாறுகிறது. 

காய்ச்சல் ஏற்பட்டால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பழங்காலமாக மக்களுக்கு காய்ச்சல் வருவது இயல்பு தான். அதனால் காய்ச்சல் ஏற்படும் வேளையில் சரியான உணவுகளை எடுத்துக்கொண்டால் நாம் சீக்கிரம் காய்ச்சலில் இருந்து குணம் அடைந்து நலம் பெற முடியும்.

நமக்கே காய்ச்சல் என்றால நம் பாட்டியோ அம்மாவோ முதலில் கஞ்சி தான் வைத்துக்கொடுப்பார்கள். கஞ்சி குடிப்பது நல்லது தான். காய்ச்சல் சமயத்தில் மற்ற உணவுகளின் சுவைப் பிடிக்காது என்பதால் கஞ்சி உணவை எடுத்துக்கொள்வதால் சற்று தெம்பாக இருக்கும். 

கஞ்சி போன்ற உணவு மட்டுமல்லாமல் பிரெட் மற்றும் பன் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். ரொட்டி, பன், பிரெட் ஆகியவற்றை பால், காபி அல்லது சூடான நீரில் தொட்டுச் சாப்பிடுவதும் நலம் பெற உதவும்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் ரொட்டி சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிரச்சினை போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் பிரெட் உடன் பழங்கள், பழச்சாறு போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழம், ஆரஞ்சு, பேரீச்சம்பழம் போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஃப்ரெட் உடன் பழங்களை எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் இருக்கும்.

காய்ச்சல் இருந்தபோதிலும் மெல்ல இதமாக இருக்கும் கோதுமை ரொட்டி போன்றவற்றை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். கோதுமையில் நார்ச்சத்து உள்ளது என்பதால் காய்ச்சல் காலங்களில் மலச்சிக்கல் பிரச்சினையைத் தடுக்க உதவும். ஆனால் ரொட்டி சாப்பிடும்போது எண்ணெய் இல்லாமல் தயார் செய்து சாப்பிடலாம்.

கோதுமை ரொட்டியில் வைட்டமின் A, அயோடின், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அதை காய்ச்சல் சமயத்தில் எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் எடுத்துக்கொள்ளலாம்.

வறுத்த அரிசி கஞ்சி என்பது பழங்காலத்திலிருந்தே காய்ச்சலுக்கான சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசியை ரவை போல உடைத்து, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து, உப்பு சேர்த்துக் குடிக்கலாம். இது காய்ச்சல் சமயத்தில் உடலுக்கு ஆற்றல் கொடுக்க மிகவும் நல்லது.

நார்ச்சத்து நிறைந்த இந்த அரிசி கஞ்சியில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. காய்ச்சலின் போது சோர்வு மற்றும் நீரிழப்பை போக்குகிறது. உடலில் உள்ள கிருமிகளைக் கொல்லும் சக்தி அரிசி கஞ்சிக்கு உண்டு. வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் ஏற்படும் வாந்தி பிரச்சினைகள் இருந்தபோதிலும், அரிசி கஞ்சியை மிதமான வெப்பத்துடன் எடுத்துக் கொள்ளும்போது இவை உடலின் வலிமையை அதிகரிக்கும். கூடுதலாக, அவ்வப்போது கஞ்சி எடுத்துக்கொள்வதன் மூலம், இழந்த ஊட்டச்சத்துக்களை உடல் விரைவாக மீட்டெடுக்க முடியும்.

கேரட், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொதிக்க வைத்து மிளகு, சாம்பார் வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து சூப் ஆக குடித்து வர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் அது படிப்படியாக கட்டுப்பாட்டுக்கு வரும். தினமும் இரண்டு கப் சூப் குடிப்பதால் காய்ச்சல் விரைவாக குணமாகும்.

சூப்பில் சேர்க்கப்படும் மிளகு ஒரு அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டிருப்பதால் செயல்படுகிறது. தொண்டையில் இருந்து சளியைக் கரைத்து வெளியேற்றும். உடலுக்கு வலிமை சேர்க்கும். காய்ச்சல் சமயத்தில் நீங்கள் காரமான உணவை சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், காய்ச்சலின் போது காரம் சேர்க்கக்கூடாது.

அது மட்டுமல்லாமல் வழக்கமான காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான கொத்தமல்லி டீ, சுக்கு காபி, செம்பருத்தி காபி, சீராக தேநீர் போன்ற இயற்கை பானங்களைக் குடித்தால் உடல் காய்ச்சலில் இருந்து குணமடைய மிகவும் உதவியாக இருக்கும்.

Views: - 179

0

0