நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காலை முதல் மாலை வரை நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு பட்டியல்!!!

11 August 2020, 1:00 pm
Quick Share

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குறிப்புகள் எல்லா மூலைகளிலிருந்தும் வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுமாறு மக்கள்  அறிவுறுத்துகிறார்கள்.

உள்ளூர் மற்றும் பருவகால உணவுகளை சாப்பிடுவது  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த வழி. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் சில அடிப்படை உணவுகளை இந்த பதிவில் பார்ப்போம்.

◆கொட்டைகள்: 

காலையில் ஊற வைத்த  பாதாம் அல்லது திராட்சையும் அல்லது முந்திரி அல்லது வேர்க்கடலையும் பகலில் எப்போது வேண்டுமானாலும் நடுப்பகுதியில் உணவாக எடுத்து கொள்ள வேண்டும். 

◆கேழ்வரகு:

இதை நீங்கள் மதிய உணவிற்காகவோ அல்லது மதிய உணவுக்கும் காலை உணவுக்கும் இடையில் எடுத்து கொள்ளலாம்.  

◆ஊறுகாய்: 

உங்கள் உணவில், குறிப்பாக எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் மாங்காய் ஊறுகாயை எடுத்து கொள்வது அவசியம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

◆அரிசி: 

அரிசி ஜீரணிக்க எளிதானது மற்றும் இதில் BCAA (கிளை-சங்கிலி அமினோ அமிலம்) உள்ளது.  இது புரத தொகுப்பு மற்றும் குளுக்கோஸின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்திலும் மூளையின் செயல்பாட்டிலும் அவை பங்கு வகிக்கின்றன. இரவு உணவிற்கு நீங்கள் அரிசி சாப்பிடலாம்.

◆ஜாதிக்காயுடன் மஞ்சள் பால்: 

நல்ல தூக்கத்திற்கு இரவு நேரங்களில் ஜாதிக்காயுடன் மஞ்சள் தூள் கலந்த பால் சாப்பிடுங்கள்.

Views: - 22

0

0