நம்ம தமிழ்நாட்டு புளி ரசம் உலகமெங்கும் ஃபேமஸ்! 90ஸ் கிட்ஸ் ஃபேவரட் புளியால் என்ன நன்மை?

14 July 2021, 11:03 am
From boosting immunity to shedding kilos, reasons to have tamarind
Quick Share

ரசம் என்ற ஒற்றை சொல் உலகமெங்கும் சென்று பிரபலமடைய காரணம் இந்த புளி தான். இந்த புளி ரசத்திற்கு மட்டும் சேர்க்கப்படுவதில்லை, புளிக்குழம்பு, மீன்குழம்பு, துவையல் என நம் பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் இருந்து நவீன உணவு முறை வரை தவிர்க்க முடியாத ஒன்றாக திகழ்கிறது. இந்த புளி இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு வகையான தனித்துவமான சுவைக்கு பெயர் பெற்றது. 

From boosting immunity to shedding kilos, reasons to have tamarind

அதுவும் புளியமரத்தின் பூ, இலைக்கொழுந்து காய், நெற்று, புளியம்பழம் என அனைத்துமே 90ஸ் கிட்ஸ்களின் செம பேவரட் ஸ்நாக்ஸ். இப்போது தான் சிப்ஸ், பிஸ்கட் என செயற்கையாக உருவாகும் உணவுகள் நம் ஊரிலும் நுழைந்துவிட்டன. அப்போதெல்லாம் விளையாட வெளியில் வெயிலியில் சுற்றித்திரியும் 90ஸ் கிட்ஸ்களின் ஸ்நாக்ஸ் பெரும்பாலான  நேரங்களில் இந்த புளிய மரத்தில் இருந்து கிடைப்பதுதான். அதுவும் புளியங்காயைப் பரிந்து கல்லில் உரைத்து உப்புச் சேர்த்து சாப்பிட்டால்… அடடா கேட்கும்போது நாவில் எச்சில் ஊறுமே!  சரி, விஷயத்துக்கு வருவோம். இதில் என்னென்ன நன்மைகள் எல்லாம் இருக்கு தெரியுமா?

இந்த புளி நார்ச்சத்து நிறைந்ததாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பதால் எடை இழப்புக்கு உகந்த உணவுப் பொருளாகும். 

இது ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்களால் நிரம்பியுள்ளது, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவும். 

From boosting immunity to shedding kilos, reasons to have tamarind

இதில் உள்ள நார்ச்சத்து அதிக பசியைக் கட்டுப்படுத்தி திருப்தி உணவை வழங்கும், ஆரோக்கியமற்ற உணவுக்கான ஏக்கத்தை குறைக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையைப் போக்கும். இதனால் எடை குறைக்க விரும்புவோர் ரசம் போன்ற புளி சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

வைட்டமின் C மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த புளி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த பழம் நுண்ணுயிர் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும். 

மேலும், ஒவ்வொரு நாளும் புளியை உணவில் சேர்த்துக்கொண்டால் அனைத்து வகையான ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களுக்கும் கூட தீர்வு கிடைக்கும். 

அதன் ஆண்டிசெப்டிக் பண்புகள் உடலில் உள்ள தொற்று, ஆஸ்துமா, சளி மற்றும் இருமல் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன.

From boosting immunity to shedding kilos, reasons to have tamarind

புளி நல்ல இதய ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது. இது ட்ரைகிளிசரைட்களை உருவாக்குவதைத் தடுக்கலாம், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

புளி உங்கள் செரிமான அமைப்பை சீராக்கவும், சிறந்த செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். பாலிபினால்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம், இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும். இந்த ஆக்ஸிஜனேற்றத்தால் வயிறு மற்றும் சிறுகுடலின் உள் புறத்தில் தோன்றும் புண்களையும் குணப்படுத்தும்.

From boosting immunity to shedding kilos, reasons to have tamarind

புளி, பேஸ்ட், சாஸ் அல்லது சப்ளிமெண்ட் போன்ற பல வடிவங்களில் சந்தையில் கிடைக்கிறது. நீங்கள் விரும்பும் வழியில் அதைப் பயன்படுத்தலாம் அல்லது உணவுகளில் சேர்க்கலாம். புளி ஒரு மலமிளக்குதல் பண்பைக் கொண்டிருப்பதால் அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். கர்ப்பிணிப் பெண்களும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்களும் புளி சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

Views: - 178

0

0