உடல் ஆரோக்கியமே இல்லாம ஒரே மன அழுத்தமா இருக்கா! கவலைய விடுங்க.. இருக்கவே இருக்கு நீர் பிரம்மி மூலிகை

13 July 2021, 11:39 am
From reducing stress to boosting immunity, here are five health benefits of Brahmi
Quick Share

நமது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அது இந்த கொரோனா சமயத்தில் கண்டிப்பாக நம் நோயெதிர்ப்பு மண்டலம் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருந்தே ஆக வேண்டும். சமீப காலமாக, மக்களின் நம்பிக்கை பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த இயற்கை மூலிகைகளின் பக்கம் திரும்பிவிட்டது. மேலும் அதிகமான மக்கள் ஆயுவேத மூலிகைகள் குறித்து தெரிந்துக்கொள்ளவும் ஆரம்பித்துள்ளனர். 

ஆயுர்வேத மூலிகைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அத்தகைய ஒரு சிறப்பு வாந்தி ஒரு மூலிகை தான் நீர் பிரம்மி. நீர் பிரம்மியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நீர் பிரம்மியின் மிகவும் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மை என்றால் இது நம் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தக்கூடியது. நினைவாற்றாலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மூளையையும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ஓர் அற்புத மூலிகை. 

நீர் பிரம்மியை தினசரி ஆறு வாரங்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு வேளைக்கு 300 மி.கி அளவில் உட்கொள்வது மிகசிறந்த நினைவாற்றலை வழங்கும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிப்பட்டுள்ளது. 

சில என்சைம்களின் செயல்பாட்டை சீரமைக்க நீர் பிரம்மி உதவுகிறது, மன அழுத்தம் ஏற்படுத்தும் என்சைம்களின் வெளியீட்டை குறைக்கிறது. மேலும் இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.

இது உங்கள் மனநிலையை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆன கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. இது உடலில் செரோடோனின் அளவை அதிகரிப்பதன் மனஅழுத்தத்தை குறைக்கவும் செய்கிறது.

அல்சைமர் நோய் குணப்படுத்த முடியாதது. ஆனால் நீர் பிரம்மி மூளையில் நோயின் தாக்கத்தை தடுக்கும் என்று கூறப்படுகிறது. இது நினைவகத்தை அதிகரிக்கும் மூலிகையாகும்.

நமது அன்றாட உணவில் ஆக்ஸிஜனேற்ற உணவுகளைச் சேர்ப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் உயிரணு சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன, இது இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது.

நீர் பிரம்மியில் உள்ள மூலப்பொருள் ஆன பாகோசைட்ஸ் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகள் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் வினைபுரிவதையும் தடுக்கும்.

நம்மில் பலர் நீண்ட அழகான கருமையான தலைமுடி வேண்டும் என்று ஏங்கியிருப்போம். உங்கள் தலைமுடியை வளர்ப்பதற்கும், வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உங்கள் உச்சந்தலையில் நீர் பிரம்மியை அரைத்து பூசினால் மயிர்க்கால்கள் நல்ல ஊட்டமடைந்து முடி உதிர்தல் குறைந்து தலைமுடி செழிப்பாக வளரும்.

Views: - 254

0

0