கடவுள் போல நம்மை நோய்க் கவலையில்லாமல் காக்கும் கருடன் சம்பா அரிசி பற்றி நமக்கு தெரிய வேண்டிய தகவல்கள்! Garudan Samba rice

Author: Hemalatha Ramkumar
12 August 2021, 5:52 pm
garudan samba rice benefits in tamil
Quick Share

நம் பாரம்பரிய அரிசிகளின் மாண்பை நாம் போற்ற மறந்ததன் காரணமாகவே, இன்று நாம் என்னென்னவோ நோய்களுக்கெல்லாம் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடைக்க வேண்டி இருக்கிறது. இதில் இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால் இப்போது இருக்கும் குறைவான பாரம்பரிய இரகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகின்றன. அவற்றை காக்க வேண்டி நாம் செய்யவேண்டியதெல்லாம், அவற்றின் பயனை அறிந்து அதை வாங்கி பயன்படுத்துவது தான்.

அப்படி நமக்கு தெரிய வேண்டிய ஒரு முக்கியமான அரிசி வகை கருடன் சம்பா தான். இது காடைகுழந்தான் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரியமான நெல் வகைகளில் இதுவும் ஒன்று. உணவுக்காக தேர்ந்தெடுக்கப்படும் அரிசி வகைகளில் கருடன் சம்பா ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது. கருடன் சம்பா அரிசிக்கு இந்த பெயர் வருவதற்கு ஒரு காரணம் உண்டு.

கருடனுக்கு அதாவது கழுகுக்கு கழுத்தில் வெள்ளையாக வளையம் இருப்பது போல கருடன் சம்பா நெல்லின் நுனி பகுதி வெள்ளையாக இருக்கும். இதனால் தான் இந்த வகை நெல் கருடன் சம்பா என்று பெயர் பெற்றது. இயற்கை பேரழிவுகளான வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வாழக்கூடிய தன்மை இந்த நெல்லுக்கு இருக்கிறது.

கருடன் சம்பா நெல் நான்கு அடி உயரம் வரை வளரும். இதன் காரணமாக கால்நடைகளுக்கு அதிகப்படியான வைக்கோல் கிடைக்கும். இந்த அரிசியை இட்லி, தோசை, கஞ்சி, சாதம், சிற்றுண்டிகள் போன்றவைகளாக செய்து சாப்பிடலாம்.

இப்போது கருடன் சம்பா அரிசியை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இந்த அரிசியின் மருத்துவ குணங்கள் என்ன என்பதையும் பற்றி பார்க்கலாம்.

 • கருடன் சம்பா அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 • இதனை வைத்து ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை சமைக்கலாம்.
 • இந்த அரிசி இரகத்தில் பசையம் குறைவாக இருக்கும்.
 • இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது உடல் வலிமை பெறும்.
 • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீர் தொற்று போன்றவற்றிற்கு இந்த அரிசி ஒரு சிறந்த மருந்து.
 • இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்ற அரிசி வகை இது.
 • உடலில் உள்ள கட்டிகளை கரைக்கும் தன்மை இந்த அரிசிக்கு உண்டு.
 • இந்த கருடன் சம்பா அரிசி பசையம் இல்லாதது.
 • இது அதிக நார்ச்சத்து நிறைந்தது ஒரு அரிசி.
 • இரத்த சக்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் ஆற்றல் மிக்கது.
 • நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய புரதச்சத்துக்கள் நிறைந்தது.
 • எலும்புகளை வலுவூட்ட மற்றும் இரத்த சோகை பிரச்சினையைப் இரும்புச் சத்து நிறைந்தது.
 • வைட்டமின், தாதுக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது
 • எடையிழக்க விரும்பும் மக்கள் கண்டிப்பாக இந்த அரிசியை சாப்பிடலாம்.
 • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.
 • மேலும், உடலின் ஆற்றல் மட்டத்தை உயர்த்தி குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

Views: - 1815

6

0