வெள்ளரிக்காய்: குறைந்த விலையில் ஊட்டச்சத்து எனும் புதையல்!!!

Author: Hemalatha Ramkumar
10 February 2023, 1:57 pm

வெள்ளரிக்காய் பல நூற்றாண்டுகளாக இந்திய சமையலில் புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பல உணவு வகைகளின் ஒரு பகுதியாக உள்ளது.

வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. இதில் கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மிகக் குறைவு. இருப்பினும், இது கால்சியம், மெக்னீசியம், லிக்னான்ஸ், பீட்டா கரோட்டின், ஃபோலேட், வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கே, பாஸ்பரஸ், பொட்டாசியம், லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் சோடியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் புதையல் ஆகும்.

வெள்ளரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்:-
வெள்ளரிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு பல நன்மைகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வெட்டப்பட்ட வெள்ளரிக்காயை நேரடியாக தோலில் தடவுவதன் மூலம், வீக்கம், எரிச்சல், வெயில் காரணமாக ஏற்படும் பாதிப்பு மற்றும் காலையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கலாம்.

வெள்ளரிக்காயில் காணப்படும் அதிக பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியமானது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது. இதன் நார்ச்சத்து, மக்கள் தங்கள் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கவும், இருதய பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

வெள்ளரிக்காய் வைட்டமின் கே மற்றும் கால்சியத்தின் வளமான மூலமாகும். வைட்டமின் கே இரத்த உறைதலுக்கு உதவுகிறது மற்றும் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது.

ஒரு கப் வெள்ளரிக்காயில் 137 கிராம் தண்ணீர் உள்ளது. வெள்ளரிக்காயில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. அவை வெப்பமான காலநிலையிலோ அல்லது உடற்பயிற்சியின் பின்னரோ வியர்வையிலிருந்து நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன. ஆகவே வெள்ளரிக்காய் சாப்பிடுவது மலச்சிக்கலைத் தடுக்கவும், சிறுநீரகக் கற்களைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான குடலைப் பராமரிக்கவும் உதவியாக இருக்கும்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!