கழுவிய நெய் கேள்விபட்டதுண்டா…. அனைவரையும் கவரும் சருமம் பெற இத பயன்படுத்தி பாருங்க!!!

29 June 2020, 12:41 pm
Quick Share

நெய் என்பது கொழுப்பின் மிகவும் தூய்மையான வடிவமாகும். வெண்ணெயை குறைவான தீயில் உருக்குவதன் மூலம் கிடைப்பது நெய். இது பாலின் இறுதி தயாரிப்பு என்றும் சொல்லலாம். நெய் இப்போது பல ஆண்டுகளாக முடி மற்றும் தோல் பராமரிப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய உணவு வகைகள் பலவற்றில் நெய் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே நெய்யின் பயன்பாடானது சமையலறை முதல் அழகு முறைகள் வரை பயன்படுகிறது.

ஆனால் கழுவிய நெய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கழுவப்பட்ட நெய் ஒரு பண்டைய அழகு ரகசியம் மற்றும் ஆயுர்வேதத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது நெய்யை சுத்தமான தண்ணீரில் நூறு முறை கழுவுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது மேகம் போன்ற ஒரு கிரீமை  விட்டு விடுகிறது. சருமத்தின் ஏழு அடுக்குகளையும் அடையும் மாய்ஸ்சரைசராக இதைப் பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில், எரிச்சலை சரி செய்யவும், அம்மை போன்ற தோல் நோய்களை வெல்லவும் இது பயன்படுத்தப்பட்டது.

கழுவப்பட்ட நெய்யினால் கிடைக்கும் நன்மைகள்:

* கழுவிய நெய்யில் ஒமேகா 3, 9 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் A, D, E மற்றும் K ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் சருமத்திற்கு சிறந்தது.

* சருமத்திற்கு தேவையான ஈரப்பத்தை அளித்து வயதான அனைத்து அறிகுறிகளையும் தாமதப்படுத்துகிறது.

* இந்தோ-அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பார்மாசூட்டிகல் நடத்திய ஆய்வில்  வெளியிடப்பட்ட ஒரு தகவலின்படி, நூறு முறை கழுவப்பட்ட நெய்  வீக்கங்களுக்கு அதிசயங்களை அளிக்கிறது என்று கூறியுள்ளது.

* கழுவிய நெய்யை தவறாமல் பயன்படுத்திய பிறகு சூரிய கதிர்களால் ஏற்படும் மங்கு சரியாகிவிடும்.

* இது அரிப்பை உண்டாக்கும்  தோலழற்சிக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.

கழுவிய நெய் செய்வது எப்படி??

பாலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வெண்ணெய் அல்லது அடர்த்தியான நெய்யை 100 முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் என்பது பெயரில் இருந்தே தெரிகிறது.

* நெய் உருகி வரும் வரை அதனை சூடாக்கவும்.

*உருகிய நெய்யை ஒரு பாத்திரத்தில் வைத்து  இரண்டு கப் குளிர்ந்த நீரை சேர்க்கவும்.

* இப்போது அதை மின்சார கலப்பான் கொண்டு கலந்து அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றவும்.

* இதை 100 முறை செய்யவும்.

இறுதியில் கிடைக்கக்கூடிய பொருளாவது கழுவப்பட்ட நெய். இதனை காற்று உட்புகாத ஒரு பாட்டிலில் அடைத்து ஆறு மாதங்கள் வரை சேகரிக்கலாம்.

Leave a Reply