தொண்டை புண் சரியாக, கொழுப்பைக் கரைத்து உடல் எடைக்குறைய உதவும் இஞ்சி டீ எப்படி குடிக்கனும் தெரியுமா?

Author: Hemalatha Ramkumar
18 August 2021, 4:06 pm
From relieving sore throat to burning belly fat
Quick Share

பருவமழை அல்லது காலநிலை மாற்றங்களால் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். மேலும் இதனால் தொண்டை புண் மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. 

அதுவுமில்லாமல் பரவிவரும் தொற்றுநோய்க்கு மத்தியில், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

அதுமட்டுமில்லாமல், நிறைய பேர் உடல் எடைக் கூடுவதால் அவதிப்பட்டு வருகின்றனர். என்னதான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் கொழுப்பின் அளவு குறைவதில்லை.

இதுபோன்ற சமயங்களில், நோயெதிர்ப்பு சக்தி, தொண்டைப் புண், உடல் எடைகுறைப்பு போன்ற அனைத்துக்கும் உதவியாக ஒரு பானம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது உண்மைதான். அது இஞ்சி டீ தான். இதை எப்படி தயார் செய்து குடிப்பது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் ஒரு கப் இஞ்சி தேநீர் தயார் செய்து குடித்தால் உங்களின் பிரச்சினைகள் எல்லாம் மாயமாய் மறைந்துப் போகும்.

ஆயுர்வேத பயிற்சியாளரின் தகவலின்படி, காரமான மற்றும் சுவையான இஞ்சி தேநீர் அருமையான ஒரு இயற்கை மாமருந்து ஆகும்.

தேவையான பொருட்கள்:

 • 1 துண்டு இஞ்சி (நறுக்கியது அல்லது மசித்தது)
 • 1 டம்ப்ளர்- தண்ணீர்
 • சிறிது எலுமிச்சை சாறு
 • சிறிது தேன்

செய்முறை

 • ஒரு துண்டு நறுக்கிய இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 5-7 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.
 • இப்போது சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
 • நன்கு கொதிக்கவிட்டு இறக்கிவிடலாம்.

இப்போது கைபொறுக்கும் சூட்டுக்கு தேநீர் தணிந்த பிறகு வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் தேன் கலந்து குடிக்கலாம். தவறியும் கூட சூடாக இருக்கும்போது தேனைச் சேர்க்க வேண்டாம். அதே போல தேனை எப்போதுமே சூடுபடுத்தக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இந்த தேநீர் குடிப்பதால்:

 • உங்கள் தொண்டை வறட்சியைக் குணப்படுத்தும்.
 • சோம்பலை நீக்கும்.
 • உங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
 • வாய்வு காரணமாக வயிற்று வலியைக் குறைக்க உதவும்.
 • உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும்.
 • வீக்கத்தைக் குறைக்க உதவும்.
 • நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

Views: - 662

2

0