உடலுக்கு நன்மை தரும் ராகி உருண்டை சாப்பிடுங்க! ஆரோக்கியமா வாழுங்க!

15 February 2020, 9:02 am
ragi updatenews360
Quick Share
 • இது கேழ்வரகு மாவை  நன்கு பிசைந்து கெட்டியாக  உருண்டை போல் செய்வார்கள். இதை தான்  ராகி உருண்டை என சொல்வார்கள்.
 • ஆனால்  நம்ம ஊரில் கேழ்வரகை   கூழாக்கி, அதை கெட்டியாக  செய்தால் ராகி உருண்டை என சொல்வார்கள். இதன் பாரம்பரிய  இடம் கர்நாடகா ஆகும்.
 • இதில்  அதிகமாக  கொழுப்பு சத்து  இருக்காது. அதனால்  உடல் எடையை குறைக்க   விரும்புபவர்கள், ராகி  உருண்டையை உண்ணலாம்.
ragi updatenews360
 • கால்சியம்   மற்றும் இரும்பு சத்துக்கள்  அதிகமாக இருப்பதால்,எலும்புகளுக்கு  வலிமை தரச் செய்கின்றது.
 • இதனால்   முதியவர்களுக்கு  இந்த உணவு நன்மை  பயக்கும். முதியவர்களுக்கு   இதை அதிகமாக உண்ணலாம்.
 • நார்சத்து  இதில் அதிகமாக  இருப்பதால் மலச்சிக்கல்  போன்ற பிரச்சனைகளை தீர்க்க  வல்லது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் ராகி  உருண்டையை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.
 • ராகி  உருண்டை  எளிதில் செரிமானமடையக்   கூடிய உணவாகும். ஜீரணம் ஆக பிரச்சனை  உள்ளவர்கள் இதை காலை உணவாக எடுத்துக்கொண்டால்   உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.
ragi updatenews360
 • அதுமட்டுமில்லாமல்   கல்லீரலில் உள்ள அதிகமான  கொழுப்புகளை ராகி உருண்டை கரைக்க  வல்லது. இதனால் கல்லீரல் அழற்சி எனப்படும்  ஃபேட்டி லிவர் என்கின்ற கல்லீரல் தொடர்பான பிரச்சனை  நீங்கிவிடும்
 • ஹைபோ தைராய்டு பிரச்சனை  உள்ளவர்கள் ராகி உருண்டையை   உணவாக எடுத்துக் கொள்ளலாம். அது இப்பிரச்சனையை  எளிதில் குணப்படுத்த கூடியது.
 • உடலுக்கு   நோய் எதிர்ப்பு  சக்தியை தரக் கூடிய ஆண்டி ஆக்சிடண்ட்    பண்புகள் ராகி உருண்டையில் அதிகமாக உள்ளதால்  இதை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் உடலுக்கு  ஆரோக்கியத்தை தரக் கூடியது. 
 • இதை  தயாரிப்பது   மிகவும் எளிதான  விஷயமாகும். உங்களுக்கு  அவசரமான நேரங்களில் இதை சிலநிம்டங்களிலே   நீங்கள் தயார் செய்து கொள்ளலாம்.

Leave a Reply