சாம்பல் பூசணிக்காய் சாப்பிடுறது நல்லதா? இதனால நமக்கு என்ன கிடைக்கும்? எடைகுறைய இதை சாப்பிடலாமா?

Author: Dhivagar
30 July 2021, 11:00 am
HEALTH BENEFITS OF ASH GOURD
Quick Share

சாம்பல் பூசணிக்காய் இந்தியாவிலும் சீனாவிலும் மிகவும் பிரபலமான ஒரு காய்கறி ஆகும். இந்த சாம்பல் பூசணிக்காய் பல வகையான பண்டங்களைச் செய்ய உதவியாக இருக்கும்.

சாம்பல் பூசணிக்காய் சத்தானதாகவும், குறைவான கலோரிகளே கொண்டிருப்பதாலும் இது மிகவும் ஆரோக்கியமான காய்கறி ஆகும். இதில் உடலுக்கு நன்மைத் தரக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் அதிக நீர்ச்சத்து உள்ளது என்பதால் ஜூஸ், ஸ்மூதீஸ் மற்றும் சாலடுகள் போன்ற பல உணவுகளில் சேர்த்து எடுத்துக்கொள்ள ஏற்றது.

சாம்பல் பூசணி பற்றி உங்களுக்கு தெரியாத சில ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

1. ஊட்டச்சத்துக்கள் நிரம்பியது – சாம்பல் பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த சாம்பல் பூசணி இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு மற்றும் நியாசின், தியாமின், வைட்டமின் C மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்களின் மதிப்புமிக்க ஆதாரமாகவும் உள்ளது. இதில் டானின்கள், பினோல்கள், கிளைகோசைடுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்து உள்ளது.

2. எடை இழப்பை ஊக்குவிக்கும் – குறைந்த கலோரிகள், அதிக உணவு நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளடக்கம் போன்ற பல முக்கியமான சத்துக்களைக் கொண்டிருப்பதால் குறைவான உணவை எடுத்துக்கொண்டு உடல் எடையைக் குறைக்க எண்ணுவோருக்கு இது மிகவும் ஏற்ற காய்கறியாக இருக்கும். இதன் நார்ச்சத்து நிறைவையும் திருப்தியையும் தரக்கூடியது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்கு பசி இன்றி திருப்தி உணர்வைத் தரும்.

3. செரிமானத்திற்கு நல்லது – சாம்பல் பூசணி உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது நமது குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்திருப்பது, நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, மலச்சிக்கல், மூல நோய் போன்ற அஜீரணத்தை நீக்குகிறது, இதனால் பெருங்குடல் ஆரோக்கியமாக இருக்கும். சாம்பல் பூசணி வயிற்று அமிலங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஹைபராசிடிட்டி, டிஸ்பெப்சியா மற்றும் அல்சர் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சாதகமாக கருதப்படுகிறது.

4. இதயத்திற்கு ஏற்றது – சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு சத்துக்களையும் சாம்பல் பூசணி கொண்டுள்ளது. ஆனால் பொட்டாசியம் உள்ளடக்கம் சோடியத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.

5. மனதை கூர்மையாக்குகிறது – பாரம்பரிய ஆயுர்வேதத்தின்படி, சாம்பல் பூசணி நமது மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது மற்றும் நினைவாற்றலை கூர்மைப்படுத்தி அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சாம்பல் பூசணிக்காயில் ஃபோலேட் உள்ளது, இது பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கிறது. கூடுதலாக, இந்த காய்கறி நம் மனதையும், மூளையையும் தளர்த்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

6, நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் – சாம்பல் பூசணி சிறந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக அமைகிறது.

Views: - 348

0

0