சாதாரண வாழைப்பூவில் இவ்வளவு நன்மைகளா! சமைத்து பாருங்கள் தோழிகளே!

14 February 2020, 1:36 pm
banana flower updatenews360
Quick Share

வாழைப்பூவை    உடலுக்கு சேர்ப்பதால், நம்   உடலில் ஏராளமான நன்மைகள் நடக்கிறது. சிலர்   வாழைப்பூ பொரியல் மொறுமொறுவென்று சமைத்து உண்பார்கள். சிலர்   குழம்பில் சேர்த்து சமைப்பார்கள். ஆனால் வருடத்திற்கு இரண்டு, மூன்று   முறைகளாவது நம் உடலுக்கு வாழைப்பூவை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழைப்பூ நம் உணவுகளில் சேர்ப்பதை அதிசயமாக   பார்க்கின்றனர். இனியாவது உங்கள் உணவில் வாழைப்பூவை சேர்த்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!

banana flower updatenews360

ஒரு வருடத்தில்   மூன்று மற்றும் நான்கு   முறையாவது வாழைப்பூவை நம்   சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். சாதத்துடன்   பிணைந்து உண்ணலாம். இதை நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்கள்   உடலில் உள்ள ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும். ரத்த சோகை   நோயை எது தடுக்க வல்லது.

  • ரத்த  ஓட்டத்தை   சீராக வைத்துக் கொள்ள  உதவுகிறது. அதுமட்டுமில்லாமல்   ரத்தத்தில் உள்ள சர்க்கரையின்   அளவை கட்டுப்பாடாக வைக்க உதவுகின்றது.
  • துவர்ப்பு  சுவை உள்ள வாழைப்பூவை  நீங்கள் தொடர்ந்து உண்டுவரலாம். இதனால்  உங்களுக்கு வாயுத்தொல்லை வராது. 
  • வயிற்றில்  உள்ள புண்களை  குணப்படுத்தி, செரிமானக்  கோளாறுகளை சரிசெய்ய உதவி  புரிகிறது.
  • வாழைப்பூ  உண்பதால் மலச்சிக்கல், சீதபேதி  மற்றும் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுதல்   போன்றபிரச்சனைகள் தடுக்கப்படும்.
  • அடுத்தாக   ஆசனவாயில் ஏற்படும் புண்  மற்றும் மூலநோய் போன்ற வியாதிகளை  குணப்படுத்த வல்லது.
  • வாழைப்பூ பொரியல்  உண்டால் அது நீரிழிவு   நோயை குணப்படுத்தும் வல்லமை  பெற்றது. அதுமட்டுமில்லாமல் வாழைப்பூவில்   ஹைப்போகிளைசீமிக் என்னும் வேதிப்பொருள் இருப்பதால்  அது நீரிழிவு நோயை எளிதில் குணப்படுத்திவிடும்.
  • பெண்களுக்கு  கஷ்டத்தை தரும்  கர்ப்பப்பை கோளாறுகள்  மற்றும் மாதவிடாய் கோளாறுகள்  போன்றவற்றை குணப்படுத்தும் வல்லமை  வாழைப்பூவிடம் உள்ளது. இதாய் நன்கு வேகவைத்து  உண்ணும் போது பெண்களுக்கு உண்டான வெள்ளைப்படுதல்  பிரச்சனை நீங்கிவிடும்.
  • வயிற்றில்  புண் உண்டாவதால்  தான், வாயில் நாற்றம் அடிக்கின்றது.  அதை குறைக்க வாழைப்பூவை சமைத்து உண்டால், வாய்  நாற்றம் குறைந்துவிடும்.