மகராசனம்: நாள்பட்ட முதுகு வலி, மன அழுத்தத்திற்கு தீர்வு… இன்னும் நிறையவே இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
24 October 2024, 12:26 pm

முதலைப் போஸ் என்று அழைக்கப்படும் மகராசனம் நம்முடைய நரம்பு அமைப்பை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த ஆசனம் உங்களுடைய முதுகுக்கு வலு சேர்ப்பதற்கு சிறந்த ஆசனமாக அமைகிறது. மகராசனம் என்பது ‘மகாரா’ மற்றும் ‘ஆசனா’ என்ற சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மகாரா என்பது முதலையை குறிக்கும், ஆசனா என்றால் தோரணை. ஒவ்வொரு வகையான யோகா ஆசனங்களும் நமக்கு ஒவ்வொரு விதமான பலன்களை தருகின்றன. அந்த வகையில் மகராசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சுவாச ஆரோக்கியம் 

தொடர்ந்து நீங்கள் மகராசனத்தை பயிற்சி செய்து வந்தால் உங்களுடைய சுவாச ஆரோக்கியம் மேம்படும். இது நுரையீரலை விரிவடைய செய்து சுவாசிப்பதை மிகவும் எளிதாக்குகிறது. ஆஸ்துமா அல்லது பிற சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் சிறந்ததாக அமைகிறது. 

மன அழுத்தத்தை குறைக்கிறது 

இந்த யோகாசனம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க வல்லது. குப்புற படுத்துக்கொண்டு உங்களுடைய தோள்பட்டையை தலைக்கு கீழ் வைக்கும் இந்த தோரணையின் போது நீங்கள் ஆழமாக சுவாசிக்கிறீர்கள். இது உங்களுடைய நரம்பு மண்டலத்தை ஆக்டிவேட் செய்கிறது. இது உங்களை ஓய்வடைய செய்து கார்ட்டிசால் அளவுகளை குறைக்கிறது. 

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது 

நீங்கள் படுத்திருக்கும் நிலையில் செய்யக்கூடிய இந்த ஆசனத்தை பயிற்சிக்கும்போது உங்கள் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த ரத்த ஓட்டம் காரணமாக வெவ்வேறு திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. 

தசைகளை ஆற்றுகிறது

இந்த ஆசனம் குறிப்பாக உங்களுடைய முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியில் உள்ள தசைகளை குறி வைத்து செயல்படுகிறது. எனவே உங்களுக்கு ரிலாக்ஸான உணர்வு ஏற்பட்டு பதற்றம் குறைகிறது. மேலும் இது தசைகளில் ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் வலியை குறைப்பதற்கு உதவுகிறது. 

இதையும் வாசிக்கலாமே: தொண்டைப்புண் இருக்கும் போது இந்த மாதிரி உணவுகள சாப்பிடுங்க… சீக்கிரம் சரியாகிடும்!!!

மனத்தெளிவை அளிக்கிறது 

இந்த ஆசனம் உங்களுடைய மன தெளிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. இது மனதை அமைதிப்படுத்தி மனச்சோர்வை போக்கி உங்களுடைய அறிவுத்திறன் செயல்பாட்டை அதிகரிக்கிறது. 

செரிமானத்தை மேம்படுத்துகிறது  

இந்த ஆசனத்தை செய்யும்போது உங்கள் அடிவயிற்றுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய அழுத்தம் செரிமான உறுப்புகளை தூண்டி செரிமானத்தை சிறந்த முறையில் நடைபெற செய்கிறது. மேலும் இது வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. 

முதுகுத்தண்டை சீராக்குகிறது 

இந்த ஆசனம் முதுகுத்தண்டை சீராக்கி முதுகு வலியை குறைக்கிறது. முதுகு தண்டு வட்டுகளில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைத்து முதுகுத்தண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே நாள்பட்ட முதுகு வலி முதுகு வலியினால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை செய்வதன் மூலமாக பலன் பெறலாம். 

மகராசனத்தை செய்வது எப்படி? 

*முதலில் உங்களுடைய வயிறு தரையில் படும்படி குப்புற படுத்துக் கொள்ளுங்கள். 

*உங்களுடைய தோள்பட்டையோடு சேர்த்து தலையை நிமிர்ந்து பாருங்கள். 

*பிறகு கைகளை மடக்கி வலது கையை இடது கையின் மீது வைக்கவும். 

*உங்களுடைய இடது உள்ளங்கை தரையிலும், வலது உள்ளங்கை இடது கையின் மீதும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். 

*மேலும் உங்களுடைய விரல்கள் முழங்கையின் உட்புறமாக தொடும் வகையில் வைக்கவும். 

*உங்கள் தலையை மையத்தில் வைத்து வலது மணிக்கட்டை இடது மணிக்கட்டு மேல் வைத்துக் கொள்ளுங்கள். 

*இப்போது கண்களை மூடிக்கொண்டு உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யுங்கள்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!