கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் தீயாய் செயல்படும் ஆப்பிள்கள்!!!

Author: Hemalatha Ramkumar
20 January 2023, 11:45 am

தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது” என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். அப்படி ஆப்பிள்களில் என்னென்ன நன்மைகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது:
ஆப்பிளில் பெக்டின் என்ற இயற்கை நார்ச்சத்து உள்ளது. ஆப்பிள் ஜூஸுடன் ஒப்பிடும்போது, பெக்டின் நிறைந்த முழு ஆப்பிளை சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்கும் விளைவைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. தினமும் இரண்டு ஆப்பிளை உட்கொள்வது மாதவிடாய் நின்ற பெண்களில் கொழுப்பைக் குறைக்க உதவும் என ஒரு ஆய்வு காட்டுகிறது.

நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது:
ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதில் குறைவான கிளைசெமிக் குறியீடு (ஜிஐ) உள்ளது. இதனால் இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது. இது எடை மேலாண்மை மற்றும் நீரிழிவு நோயைத் தடுப்பது ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது.

உடல் பருமனை தடுக்கிறது:
ஆப்பிளில் இருந்து எடுக்கப்படும் பெக்டின் குடல் நுண்ணுயிரியை (நன்மை தரும் குடல் பாக்டீரியா) கட்டுப்படுத்த உதவும் என்று விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. இது உடல் பருமன் மற்றும் பிற அழற்சி கோளாறுகளைத் தடுக்க உதவும். மனிதர்களைப் பற்றிய ஆய்வுகளும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. ஆனால் இது குறித்த கூடுதல் ஆராய்ச்சி தேவை.

இதய நோய் வராமல் பாதுகாக்கிறது:
ஆப்பிள்களில் பாலிபினால்கள் நிறைந்துள்ளது. ஆப்பிள்களில் உள்ள அதிக குர்செடின் அளவு காரணமாக இதய நோய் மற்றும் ஆஸ்துமா உட்பட பல நாள்பட்ட நோய்களின் ஆபத்துகளை குறைக்கிறது என ஒரு ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்:
பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது அதிக எலும்பு அடர்த்தி மற்றும் மேம்பட்ட எலும்பு ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஆப்பிள்கள், உடலில் இருந்து இழக்கப்படும் கால்சியத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளின் வலிமையை மேம்படுத்துகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!