சாக்லேட் சாப்பிடுறதால நல்லது கூட நடக்கும் தெரியுமா… ஆனா அளவா தான் சாப்பிடணும்!!!

Author: Hemalatha Ramkumar
1 December 2022, 12:47 pm
Quick Share

சாக்லேட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு என்று யார் சொன்னாலும் நாம் அதை சாப்பிடாமல் விடுவதில்லை. ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிடுவது நல்லது மற்றும் உங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது:
பல ஆய்வுகளின்படி, சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் உங்கள் நரம்புகள் மற்றும் தமனிகள் மிருதுவாக இருக்க உதவும். டார்க் சாக்லேட்டுகள் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை சுமார் 37% குறைக்கின்றன.

வயதாகும்போது உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது:
சில ஆய்வுகளின்படி, சாக்லேட் சாப்பிடுவது அறிவாற்றல் செயல்பாட்டை பெரிதும் மேம்படுத்தும் என்று காட்டுகிறது.

சூரிய கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது:
அதிக ஃபிளவனோல் உள்ளடக்கம் கொண்ட சாக்லேட்டுகள் புற ஊதா ஒளியில் இருந்து தோலை பாதுகாக்கும் திறன் கொண்டது.

சருமத்திற்கு நல்லது:
டார்க் சாக்லேட் உண்மையில் உங்கள் சருமத்திற்கு நல்லது! டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. ஆனால் இதற்காக நீங்கள் சன்ஸ்கிரீனைத் தவிர்க்கலாம் என்று அர்த்தமல்ல.

உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது:
ஒருவரை உற்சாகப்படுத்த சாக்லேட் பெரிதும் நன்மை பயக்கும். இது ஒருவரை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கும்.

உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது:
சாக்லேட் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

Views: - 529

0

0