தினமும் செவ்வாழைப்பழம் உண்பதால் கிடைக்கும் அதீத பலன்கள்!!!

Author: Hemalatha Ramkumar
31 October 2022, 1:50 pm
Quick Share

மஞ்சள் மற்றும் பச்சை வாழைப்பழங்களை விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த சிவப்பு வாழைப்பழங்கள் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளன. வழக்கமான வாழைப்பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் C இருப்பதால் இது மற்ற வகைகளை விட சிறந்தவை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

செவ்வாழைப்பழங்கள் இயற்கை ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும். இந்த நம்பமுடியாத வகை வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் தினசரி பரிந்துரைக்கப்படும் நார்ச்சத்தில் 16% வழங்குகிறது. இந்த பதிவில், செவ்வாழைப்பழத்தின் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பிற வாழைப்பழங்களுடன் ஒப்பிடும்போது, ​​செவ்வாழைப்பழத்தில் டோபமைனின் செறிவு 54 mcg/g என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. டோபமைன் ஒரு முக்கிய நரம்பியக்கடத்தி ஆகும். இது ஒரு நல்ல மனநிலை மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. நீண்ட காலத்திற்கு பார்கின்சன் போன்ற நரம்பியக்கடத்தல் நோய் அபாயத்தைத் தடுக்கவும் இது உதவும்.

கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது
செவ்வாழைப்பழத்தில் பைட்டோஸ்டெரால்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அவை குடலில் உறிஞ்சப்படுவதன் மூலம் உடலில் எல்டிஎல் கொழுப்பின் அளவை (கெட்ட கொலஸ்ட்ரால்) குறைக்க உதவுகின்றன.

சிறுநீரகக் கற்களைத் தடுக்கிறது
பொட்டாசியம் சிறுநீரகக் கற்களின் அபாயத்தைக் குறைப்பதோடு தொடர்புடையது. செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், சிறுநீரக கற்கள் உருவாவதை இது தடுக்கிறது. செவ்வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்க உதவும் சிறந்த வழியாகும்.

எடை இழப்புக்கு உதவும்
மற்ற நிற வாழைப்பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளது. அவை குறைவான கலோரிகளோடு வயிறு நிரம்பிய உணர்வையும் தருகின்றன. இதன் மூலம், செவ்வாழைப்பழங்களை தொடர்ந்து உட்கொள்வது இறுதியில் எடையைக் குறைக்க உதவும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது வாஸ்குலர் ஆரோக்கியத்தை பராமரிப்பது தொடர்பான பல சிக்கலான நோயெதிர்ப்பு செயல்பாடுகளுக்கு அந்தோசயினின் என்ற ஃபிளாவனாய்டு உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மஞ்சள் மற்றும் பச்சை வாழைப்பழங்களுடன் ஒப்பிடும்போது செவ்வாழைப்பழத்தில் அந்தோசயினின்கள்சிவப்பு நிறைந்துள்ளன. அதனால் அவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். மேலும், செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை பராமரிக்க உதவும்.

Views: - 470

1

0