வைரலாகி வரும் நெய் தேநீர்… அப்படி என்ன இருக்கு இதுல???

Author: Hemalatha Ramkumar
14 September 2024, 3:51 pm

உடல் எடை இழப்புக்கு நெய் காபி உதவுவதாக பிரபலமாக பேசப்பட்டதை அடுத்து தற்போது நெய் தேநீர் இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது. இது ஒரு அற்புதமான சூப்பர் ஃபுட் ஆக இருப்பதாகவும், இது செரிமான ஆரோக்கியம், மாதவிடாய் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது. கொதிக்கும் டீயில் பால் இல்லாமல் நெய் சேர்ப்பது ஒரு அற்புதமான பழமையான ஆயுர்வேத ரெசிபி ஆகும். நெய் தேநீர் என்பது பாரம்பரியமாக தயாரிக்கப்படும் தேநீர். பொதுவாக பிளாக் டீ அல்லது ஹெர்பல் போன்றவற்றுடன் நெய்யை கலந்து உருவாக்கப்படுவது ஆகும். இதற்கு ஒரு கப் டீயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். இது தேநீருக்கு கிரீமியான ஒரு அமைப்பை கொடுக்கும்.

நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் பிற பயனுள்ள காம்பவுண்டுகள் உள்ளது. அதே நேரத்தில் தேநீரில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பல நன்மைகள் நிரம்பியுள்ளது. இந்த இரண்டும் சேரும்பொழுது அது நம்மை ரிலாக்ஸாக இருக்க உதவும் ஒரு பானமாக மட்டுமல்லாமல் செரிமான ஆரோக்கியத்தையும் நமது ஒட்டு மொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது.

நெய் நமக்கு நீர்ச்சத்தை வழங்காது. எனினும் தேநீரில் அதிலும் குறிப்பாக மூலிகை தேநீரில் லேசான லாக்சேட்டிவ் விளைவுகள் இருப்பது ஒட்டுமொத்த திரவ உட்கொள்ளலை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும் நெய்யில் காணப்படும் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலமான பியூட்டிரேட் என்பது செரிமான ஆரோக்கியத்திற்கு உணவளிக்கிறது.

பியூட்டிரேட் என்பது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை பராமரித்து வீக்கம் ஏற்படுவதை குறைத்து மலம் எளிதாக வெளியேறுவதற்கு உதவுகிறது. நெய்யில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு காம்பவுண்டுகள் அதிகம் இருப்பதால் இது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

வீக்கத்தை குறைப்பதன் காரணமாக நெய் தேநீரானது மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் வலியை குறைக்கிறது. நெய் தேநீர் நமக்கு பல்வேறு நன்மைகளை அளித்தாலும் இதனை பருகும் பொழுது நாம் ஒரு சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நெய்யில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகம் உள்ளதால் இதனை அளவோடு குடிக்க வேண்டும். மேலும் கூடுதல் கலோரிகளை தவிர்ப்பது நல்லது. நெய் என்பது தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் என்பதால் பால் சார்ந்த பொருட்களுக்கு உங்களுக்கு அலர்ஜி எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை பால் சார்ந்த பொருட்களுக்கு நீங்கள் உணர் திறன் கொண்டவர் என்றால் நெய் தேநீரை முயற்சிக்கும் முன்பு மருத்துவரை அணுகவும்.

உங்களுக்கு நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது தாங்க முடியாத மாதவிடாய் வலி இருந்தால் கட்டாயமாக நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். நெய் தேநீர் என்பது உங்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்குமே ஒழிய அது எந்த ஒரு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாக அமையாது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!