#HealthTips: செம்பருத்தி தேநீரின் நன்மைகள் & பக்க விளைவுகள் | Health Benefits and Side Effects of Hibiscus Tea

Author: Dhivagar
26 August 2021, 5:52 pm
Health Benefits Of Hibiscus And Its Side Effects
Quick Share

செம்பருத்தி மலர் வெறும் அழகுக்கானது மட்டுமல்ல. செம்பருத்தி தேநீர் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த தேநீர் அருந்துவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். உடலில் உள்ள LDL கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இருதய நோய்களைத் தடுக்க இந்த தேநீர் மிகவும் நன்மை பயக்கும். இரத்தச் சர்க்கரையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைத் தடுக்கவும், ஹைப்போகிளைசிமிக் மற்றும் ஹைப்போலிபிடெமிக் பண்புகளை கொண்டுள்ளது.

செம்பருத்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. 

Health Benefits Of Hibiscus And Its Side Effects

செம்பருத்தியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் பாதிப்பை தடுக்கவும், வயதான அறிகுறிகளை தடுக்கவும் உதவுகிறது. இது தன்னில் கொண்டிருக்கும் வைட்டமின் C காரணமாக பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

புரோட்டோகடெக்யூயிக் அமிலத்தின் (protocatechuic acid) வளமான ஆதாரமாக இருப்பதால், செம்பருத்தி தேயிலை புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செம்பருத்தி தூள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது, செரிமானத்தை சிறப்பாக செயல்படுத்தும், எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் மனச்சோர்வை நீக்க மருந்தாக செயல்படும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் 
கல்லீரல் சேதத்தைத் தடுக்கும்
மாதவிடாய் கால வலியிலிருந்து நிவாரணம்
மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் கொண்டது
செரிமானத்தை மேம்படுத்தும்
இரத்த அழுத்த அளவை நிர்வகிக்கும்
பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டது
புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும்
எடையிழப்புக்கு உதவும்
சருமத்திற்கு இளமையான பொலிவைக் கொடுக்கும்
Health Benefits of Hibiscus Tea
Lowers Cholesterol
Prevents Liver damage 
Helps in relieving menstrual pain
Antidepressant properties
Improves Digestion
Helps in Managing blood pressure
It has antibacterial properties
Helps in preventing cancer
Helps in weight loss process
It has anti aging properties
Health Benefits Of Hibiscus And Its Side Effects

செம்பருத்தி உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த அழுத்தத்தை மிகவும் திறம்பட குறைக்கிறது. இருப்பினும், ஹைபோடென்ஷன் அல்லது குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள், செம்பருத்தி டீயை உட்கொள்ள வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது. இது தலைசுற்றல், மயக்கம் மற்றும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

செம்பருத்தி ஈஸ்ட்ரோஜன் அளவையும் பாதிக்கிறது, எனவே பிறப்பு கட்டுப்பாட்டு சிகிச்சை அல்லது ஹார்மோன் மாற்று சிகிச்சையில் இருக்கும் பெண்கள் இந்த தேநீர் அருந்தக்கூடாது. 

கர்ப்பிணிப் பெண்களும் செம்பருத்தி தேநீரை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் கருப்பையில் மாதவிடாய் ஓட்டம் ஏற்படலாம். எனவே, மற்றவர்கள் அனைவரும் கூட அளவோடு செம்பருத்தி தேநீர் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Views: - 555

1

0