“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு…” இதய நோய், சர்க்கரை நோய் இருக்கவங்களும் இந்த காட்டுயானம் அரிசியை தாராளமா சாப்பிடலாம்!

Author: Hemalatha Ramkumar
11 August 2021, 11:35 am
health benefits of kattuyanam rice
Quick Share

“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு…” என்று கழனியில் பாடிக்கொண்டு அயராது பாடுபட்ட நம் முன்னோர்கள் எல்லாம் சாப்பிட்டது நெல் சோறு தான். இன்றோ நெல் சாதமே வேண்டா எதிரியைப் போல் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

பாரம்பரிய அரிசிகளின் மகிமையை எல்லாம் நாம் மறந்தே போய்விட்டோம். பாரம்பரிய அரிசி வகைகளில் நீங்கள் நினைத்தும்கூட பார்த்திராத பல பல அற்புதமான நன்மைகள் குவிந்து கிடக்கிறது. அப்படி நாம் பயன்படுத்த தவிறிய ஒரு சிறந்த பாரம்பரிய அரிசி தான் காட்டுயானம்.

இந்த அரிசி குறித்து விழிப்புணர்வு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுவதால் மக்களால் பரவலாக வாங்கி சாப்பிடப்படுகிறது. குறிப்பாக டயாபெட்டிக் நோயாளிகள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெல்லின் கதிர் கிட்டத்தட்ட ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியது. இந்த காட்டுயானம் பயிரை பயிரிட்ட வயலில் ஒரு காட்டு யானை நுழைந்து கொண்டால் அதைக்கூட கண்டுபிடிக்க முடியாதாம். ஆதலால் தான் இந்த அரிசிக்கு காட்டுயானம் என்ற பெயர் வந்துள்ளது.

காட்டுயானம் அரிசி இருநூற்று பத்து நாட்களுக்கு விளைவிக்கப்படுகிறது. அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு இறுப்பு வைக்கப்படுகிறது. பாரம்பரியத்தை மறக்கக்கூடாது என்ற காரணத்தால் இத்தனை கஷ்டப்பட்டு ஒரு விவசாயி இந்த அரிசியை உருவாக்குகிறார்.

இந்த அரிசியை சாப்பிட்டாலே நீரிழிவு நோய் நம்மை நெருங்கவே நெருங்காது என்று சொல்லப்படுகிறது. மெதுவாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு அரிசி வகை இது. ஆனால் நாம் இப்போது அதிகம் பயன்படுத்தும் வெள்ளை அரிசி நாம் மென்று சாப்பிடாலே அதி விரைவில் செரிமானம் ஆகி விடுகிறது. இதன் காரணமாக இது நம் உடலின் இரத்தத்தில் ஈசியாக கலந்து நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. மேலும் பசியை அதிகரிப்பதன் மூலம் அதிக உணவு உட்கொள்ளலுக்கு தூண்டச் செய்து நம் உடல் எடை அதிகரிக்கவும் காரணமாக அமைகிறது.

நீரிழிவு நோய் வந்துவிட்டாலே அடுத்தடுத்து பல நோய்கள் வந்து விடும். மேலும் உடல் எடைக்கூடினால் இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படக்கூடும். இதனால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இதே தவறை தான் நம் பிள்ளைகளுக்கும் நாம் சொல்லி கொடுக்கிறோம். கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால்
கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அடுத்த தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்க முதலில் நாம் அதை பயன்படுத்த வேண்டும்.

அரிசியை வெறும் சாதமாக தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை புட்டு, இடியாப்பம், கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி, பூரி, இட்லி, உப்புமா, தோசை, அடை என பல வகைகளில் பிடித்தமாதிரி செய்து சாப்பிடலாம். இப்போதெல்லாம் நீரிழிவு நோயாளிகள் சப்பாத்தி சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் நம் வெப்பநிலைக்கு ஏற்ற உணவு சப்பாத்தி கிடையாது.

இருநூற்று பத்து நாட்கள் விளைவிக்கப்படும் இந்த அரிசியை பல விவசாயிகள் கஷ்டப்பட்டு அறுவடை செய்து மக்களுக்கு தருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், நம் உடல் நலத்திற்காகவும் கண்டிப்பாக நாம் வாங்கி சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அரிசி ஒரு அற்புதமான மாமருந்து.

எனவே இதய நோய் இருப்பவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர்கள், உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் என எல்லோருமே இந்த அரிசியை தங்கள் அன்றாட பயன்பாட்டில் எடுத்துக்கொண்டால் நீங்கள் நினைத்தும் கூட பார்த்திராத என்னற்ற நன்மைகள் உண்டாகும்.

Views: - 481

0

0