எறும்பு போல சுறுசுறுப்பாகவும் இரும்பு போல வலுவாகவும் இருக்க இந்த பாரம்பரிய அரிசியை வாங்கி சாப்பிடுங்க!

Author: Dhivagar
23 August 2021, 6:19 pm
health benefits of kullakar rice
Quick Share

பாரம்பரியம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நம் முன்னோர்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் தான். அந்த வகையில் அவர்களின் வாழ்க்கை முறையில் முக்கிய பங்கு வகித்து அவர்களின் ஆரோக்கியத்துக்கு ஆதாரமாக இருந்த குள்ளக்கார் அரிசியின் பயன்களைப் பற்றி தான் பார்க்கபோகிறோம். இந்த அரிசியின் பெயரை கேட்ட உடனே உங்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் உண்மையில் இது நம் முன்னோர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த ஒரு அரிசி ஆகும். எறும்பு போல சுறுசுறுப்பாகவும் இரும்பு போல வலுவாகவும் இருக்க இந்த அரிசியை தான் அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இடைப்பட்ட முப்பது, நாற்பது வருடங்களாக தான் இந்த அரிசி பயன்பாட்டில் இல்லாமல் போய் விட்டது. ஆனால் இந்த தலைமுறையினருக்கு இதனை அறிமுகப்படுத்தும் கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. ஆரோக்கியமான உடலை பெறுவதற்கு இது போன்ற பாரம்பரிய உணவுகள் பெரிதும் உதவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

குள்ளக்கார் என்பது சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு அரிசி வகையாகும். சீனாவில் இது போன்ற சிவப்பு நிற அரிசிகள் அதிக பயன்பாட்டில் உள்ளன. இந்த அரிசியின் சிவப்பு நிறத்திற்கு காரணமாக இருப்பது லைக்கோபீன் என்னும் நிறமி ஆகும். இத்தகைய நிறமியை தனியாக பிரித்து எடுத்து புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றது. நம் முன்னோர்கள் எப்படி உணவையே மருந்தாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும்.

இந்த பாரம்பரிய அரிசியின் மகத்துவம் நம்மை விட சீனர்களுக்கு அதிகம் புரிந்து உள்ளது என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. பாரம்பரிய அரிசியில் பூச்சுக்கொல்லி மற்றும் செயற்கை இராசயனங்கள் பயன்படுத்தாமல் பயிரிடப்படுவதால் இதனை சாப்பிடும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையான முறையில் அதிகரிக்கிறது.

இந்த குள்ளக்கார் அரிசியில் அதிக அளவில் ஆன்டியாக்ஸிடன்டுகள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் நல்ல அளவு சின்க், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன. இரத்த சோகை இருப்பவர்கள் இதனை தொடர்ந்து எடுத்து வந்தால் விரைவில் இரத்தம் ஊறும். அதே போல உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்களுக்கு இந்த அரிசியை கண்டிப்பாக எடுக்கலாம்.

ஏனெனில் இந்த அரிசியை கஞ்சியாகவோ அல்லது சாதமாக வைத்து சாப்பிடும் போது இதனை கொஞ்சமாக சாப்பிட்டாலே வயிறு நிறம்பியது போன்ற ஒரு உணர்வை தரும். நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். ஆகவே உடல் எடையை குறைக்ககும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இந்த அரிசி ஒரு நல்ல சாய்ஸ். அடுத்தபடியாக இது நரம்பிற்கு வலுவூட்டக் கூடிய ஒரு அரிசி வகை. உடலை வலுவடைய செய்யும்.

மேலும் மூளையை சுறுசுறுப்பாக வைத்து உங்களை எப்போதும் ஆக்டிவாக வைத்து கொள்ள உதவுகிறது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற அனைத்து சத்துக்களையும் இந்த அரிசி வழங்குகிறது. என்ன நண்பர்களே… குள்ளக்கார் அரிசியின் பயன்களை பற்றி தெரிந்து கொண்டீர்களா… இனியாவது பாரம்பரியத்தை ஒதுக்காமல் அதனோடு வாழ முயற்சி செய்வோம்.

Views: - 374

1

0