சரும பிரச்சினைகள் தீர்ந்து அழகே பொறாமைப்படும் பேரழகாய் மாற உதவும் குப்பைமேனி எண்ணெய்!

Author: Hemalatha Ramkumar
14 August 2021, 3:36 pm
health benefits of kuppaimeni oil
Quick Share

குப்பாமேனி செடி அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குண நலன்களையும் கொண்டது. இந்த அற்புதமான இயற்கை மூலிகை இருக்கும்போது நாம் ஏதேதோ பெயரில் என்னவென்றே தெரியாத செயற்கை ரசாயன பொருட்கள் எல்லாம் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறோம். அது தேவையில்லை என்பதே எங்கள் கருத்து. அவற்றுக்கெல்லாம் ஒரு சிறந்த மாற்று தான் இந்த குப்பைமேனி. 

தேவையற்ற சரும முடிகளை அகற்றுவது முதல் அனைத்து வகையான தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது வரை, இந்த குப்பைமேனியில் ஏராளமான நற்குணங்கள் குவிந்துக் கிடக்கிறது. இந்த அற்புதமான மூலிகையான குப்பைமேனியில் இயற்கையாகவே மருத்துவ பண்புகள் நிறைந்து உள்ளது. இந்த மூலிகையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் குப்பைமேனி எண்ணெய். இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். 

தோல் நோய்களுக்கு குணமளிக்கும் குப்பைமேனி எண்ணெய்:

முதலில் குப்பைமேனி எண்ணெயை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

குப்பைமேனி எண்ணெயை தயாரிக்க, வயல் வெளிகளில் கிடைக்கும் ஃப்ரெஷான குப்பைமேனி இலைகளை எடுத்து, மிக்சியில் போட்டு மிக மென்மையாக பேஸ்ட் போல நைசாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அதை நன்றாக அரைத்து முடிந்ததும், ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி அதிலிருந்து சாற்றை வடிகட்டவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது ஃப்ரெஷ் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளுங்கள்.

அனைத்தையும் கலந்து ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கத் தொடங்குங்கள்.

நன்கு காய்ந்து சத்தம் அடங்கியதும் ஒரு நல்ல நறுமணம் வரும் வேளையில், அடுப்பை அணைத்து விடுங்கள். 

அவ்வளவுதான் அருமருந்தான குப்பைமேனி எண்ணெய் தயார்!!

சரி இப்போது எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

இந்த எண்ணெயை சூடாக பயன்படுத்தக்கூடாது என்பதால்  குளிர்விக்கவும். இந்த எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பதப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். 

அரிப்பு தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி, அனைத்து சிறு தோல் நோய்த்தொற்றுகள், காயங்கள், சிராய்ப்புகள் மற்றும் வெட்டுக்களுக்கு சிகிச்சையளிக்க குணமாகும் வரை இந்த எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள். 

விரைவில் உங்கள் தோல் பிரச்சினைகள் எல்லாம் பறந்து போகும். இது போன்ற பல இயற்கை வைத்தியங்கள் இருக்கும்போது செயற்கையாக தயாரிக்கப்படும் க்ரீம்களையும் ஆயின்மென்டுகளையும் இனி நீங்கள் பயன்படுத்தவா போகிறீர்கள்?

Views: - 1444

0

0