எலும்புகளை வஜ்ஜிரம் ஆக்கும் வஜ்ஜிரவல்லி! இது உங்களுக்கு தெரிந்த ஒன்று தான்!

7 June 2021, 4:15 pm
health benefits of pirandai in tamil
Quick Share

உலகிலேயே கடினமான பொருள் வைரம் தான் அதில் உள்ள கார்பன் பிணைப்பையே கூட உடைத்து விடும் தன்மை இந்த வஜ்ஜிரவல்லி எனும் பிரண்டை சாற்றுக்கு உண்டு என்று புகழுமளவுக்கு அவ்வளவு  நன்மைகளை கொண்டது இந்த பிரண்டை.

முன்பெல்லாம் கிராமபுறத்து இயற்கை வேலிகளிலும், கரடுகளிலும், காடுகளிலும் தான் இந்த பிரண்டை கிடைக்கும். ஆனால் இப்போதோ இதன் மகிமை உணர்ந்து மொத்தமாக பயிர் செய்யப்பட்டு நகரங்களில் உள்ள சந்தைகளிலும் கூட கிடைக்கிறது. 

அதே சமயம் வைரம் போன்று எலும்புகளுக்கு வலு சேர்ப்பதாலும் இதற்கு வஜ்ஜிரவல்லி என்ற பெயர் உண்டு. பிரண்டையில் முப்பிரண்டை, ஓலைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, உருட் பிரண்டை என பல வகைகள் உள்ளது.  

health benefits of pirandai in tamil

பசியின்மை பிரச்சினையால் அவதிபடுபவர்கள் பிரண்டைத் துவையலைச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். 

பசியின்மை பிரச்சினையைப் போக்க பிரண்டைத் துவையல் செய்வது எப்படி?  நல்ல கொழுந்து பிரண்டைத் தண்டை எடுத்து நாரை நீக்கிவிட்டு நெய் விட்டு நன்றாக வதக்கி, சின்ன வெங்காயம், புளி, உப்புச் சேர்த்து துவையல் அரைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுச்  சாப்பிட செரிமான அமைப்பு சீராக செயல்படும். 

செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாம் நீங்கும். உணவுகளின் சுவை தெரியவில்லை என்றாலும் பிரண்டைத் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.  

பிரண்டையை நன்றாக நெய் விட்டு வதக்கிய பிறகு ஒரு சிறிய நெல்லிக்காய் அளவுக்கு சாப்பிட்டு வந்தால், மூல நோய் பிரச்சினையால் ஏற்படும் ஆசனவாய் எரிச்சல்,ரத்தம் வடிதல், வலி ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் சீக்கிரமே குணமடையும்.

அதே போல தொடர்ச்சியாக மூட்டுவலி பிரச்சினை இருப்பவர்களுக்கும் இந்த பிரண்டை தூதுவளை துவையல் நல்ல பலனைக் கொடுக்கும்.  ஏர் உழுவும் காலங்களில் எல்லாம் கால் வலியை போக்க விவசாயிகள் பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து துவையல் நல்லெண்ணெய் விட்டு சாப்பிடுவது வழக்கம். அதையே நாமும் தொடர்ந்து செய்து வர மூட்டுவலி பிரச்சினை நீங்கிவிடும்.

health benefits of pirandai in tamil

பிரண்டையில் இருக்கும் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) எலும்பு மஜ்ஜையில் திரவம் அதிகமாக சுரக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் பல விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் தெரிவித்திருப்பதாகவும் ஒரு குறிப்பு உண்டு. 

பிரண்டைத் தண்டுகளை சின்ன சின்னதாக நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து, வடகமாகக் குளிர் காலத்தில் சாப்பிட்டு வர, கப நோய்கள் எதுவும் அவ்வளவு எளிதில் நம்மை நெருங்கிவிட முடியாது என்று ‘தேரையர் காப்பியம்’ நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Osteoporosis எனும் எலும்பு அடர்த்திக் குறைவு பிரச்சினை உள்ளவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமடையும். பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்வதால் பற்களும் பலமடையும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புச பிரச்சினைக்கு ஒரு சிறிய துண்டு பிரண்டையை உப்பு தடவி ஊற வைத்து, இளஞ்சூட்டில் வாட்டி, அதை நீரில்  ஊற வைத்து விட வேண்டும். இந்த வாட்டிய பிரண்டை  நீரை கொடுத்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புச பிரச்சினை குணமடையும். 

தசைப்பிடிப்பு, சுளுக்கு போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவ்விடத்தில் பிரண்டையை  அரைத்து உப்பு புளி சேர்த்து தண்ணீரிட்டுக் காய்ச்சி மிதமான சூட்டில் பற்றுபோட்டால் குணமாகும்.

பழங்காலத்தில் நம் அருகில் இல்லை என்றாலும் நம் உணவு முறையில் முக்கிய பங்கு வகித்த பிரண்டை நம் அருகே இருக்கும் கடைகளில் இருந்தும் நாம் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அது நம் மடமை என்று தான் சொல்ல வேண்டும். முடிந்த வரை பிரண்டைத் துவையலை  உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இன்னும்  சற்று நேரம் கிடைத்தால் கணுப்பகுதியுடன் கூடிய பிரண்டையை உங்கள் மாடித்தோட்டத்திலோ வயல் வெளியிலோ நட்டு வைத்த நண்பனாக வளருங்கள்.  

Views: - 315

0

0