தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

12 May 2021, 6:55 am
health benefits of red banana in tamil
Quick Share

உலகில் பலரும் அதிகம் விரும்பும் பழங்களில் ஒன்று என்றால் வாழைப்பழத்தைச் சொல்லலாம். வாழைப்பழத்தில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக செவ்வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் C ஆகியவற்றுடன் நிறைந்துள்ளது. 

பீட்டா கரோட்டின் என்பது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதை தினமும் எடுத்துக்கொள்வது முக்கியம். பீட்டா கரோட்டின் உடலில் நுழையும் போது அது வைட்டமின் A ஆக மாறுகிறது, இது கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை தடுக்கும். இது உடலில் கால்சியம் உட்கொள்ளலையும் அதிகரிக்கிறது மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே சிறுநீரக பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.

உடல் எடையை குறைக்க விரும்பும் மக்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் கலோரிகளில் மிக குறைவு. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் காலையில் ஒரு செவ்வாழைப்பழம் உட்கொண்டால், பசி அதிக நேரம் எடுக்காது.

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிப்பது அவசியம். அதற்கு செவ்வாழைப்பழம் மிக உதவியாக இருக்கும். ஏனென்றால், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்த அணுக்களின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

செவ்வாழைப்பழம் உடலுக்கு ஆற்றல் தரக்கூடியது மற்றும் உடலின் சுறுசுறுப்பை மேம்படுத்தும். செவ்வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரை ஆற்றலாக மாற்றப்பட்டு, சோர்வைப் போக்கும் மற்றும் உடலைப் புதுப்பித்து, சுறுசுறுப்பாக வைத்திருக்கும். எனவே நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பினால் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

செவ்வாழைப்பழத்தில் இயற்கையாகவே Antacid பண்பு இருப்பதால்  இந்த பழத்தை தினமும் சாப்பிடுவதால் நெஞ்சுக்கரிப்பு பிரச்சினைத் தீரும்.

Views: - 523

8

1