#HealthTips: சப்போட்டா பழத்தின் நன்மைகள் & பக்கவிளைவுகள் | Health benefits & Side Effects of Sapodilla (Chiku)

Author: Hemalatha Ramkumar
27 August 2021, 9:04 am
health benefits of sapota
Quick Share

சப்போட்டா பழம் ஒரு தனித்துவமான சுவை கொண்டது என்பதால் அது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த பழம் வெறும் நல்ல சுவை கொண்டது  மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு நன்மைகள் இந்த சப்போட்டா பழத்தில் உண்டு. 

சப்போட்டா – நன்மைகள்

வைட்டமின்கள் C மற்றும் A நிறைந்தது
ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரம்
உடலுக்கு ஆற்றல் வழங்கும்
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
செரிமானத்திற்கு உதவும்
எலும்புகளுக்கு நல்லது
சரும ஆரோக்கியத்திற்கு நல்லது
எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது
அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்தும்
முடி உதிர்தலைத் தடுக்கும்
இளமையான தோற்றத்தை கொடுக்கும்
இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை தடுக்கும்
கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்
Rich in vitamins C and A
Great source of antioxidants
Provides energy
Boosts the immune system
Aids in digestion
Good for the bones
Great for skin and hair
Helps control weight
Has anti-inflammatory properties
Controls blood pressure levels
Prevents hair fall
Promotes younger-looking skin
Prevents gastric and bowel problems
Beneficial for pregnant women

இது குறைந்த கொழுப்பு அளவுடன் அதிக கலோரிகளைக் கொண்ட பழம் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளடக்கம் இல்லாதது என்பதால் எடை இழக்க முயற்சி செய்யும் மக்களுக்கு அதிகம் பசி எடுக்காமல் இருக்கவும், முழுமையான திருத்தி உணர்வைத் தரவும் இது ஒரு சிறந்த உணவு. சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க இந்த சப்போட்டா பழம் மிகவும் சரியான ஒன்று.

இந்த சப்போட்டா பழம் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் கொண்டதன் காரணமாக குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சினையையேப் போக்கவும், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், உணவுப் பாதையின் வீக்கம், இரைப்பை அழற்சி போன்ற பிற செரிமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த பழம் மிகவும் உதவியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் சளி, காய்ச்சல் போன்ற நாள்பட்ட வியாதிகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்க சப்போட்டா பழம் மிகவும் உதவியாக இருக்கும். வைட்டமின் A பார்வையை மேம்படுத்தும் திறன் கொண்டது மற்றும் சருமத்தின் தரத்தை மேம்படுத்த மிகவும் நல்லது, இரத்த அழுத்த அளவைப் பராமரித்தல் மற்றும் ஆரோக்கியமான இதய பாதுகாத்தல் என பல்வேறு நன்மைகளையும், சருமம் வயதான தோற்றத்தை அடையாமல் அழகாக இருக்கவும் இந்த சப்போட்டா மிகவும் உதவியாக இருக்கும்.

சப்போட்டா – பக்க விளைவுகள்

சப்போட்டா பழத்தினால் சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அதிகப்படியான சப்போட்டா பழம் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த பழத்தில் இருக்கும் டானின் (Tannin) ஒரு கசப்பான மற்றும் வாயில் விரும்பத்தகாத அரிப்பு உணர்வுகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக நன்கு கனியாத சப்போட்டா பழம் உட்கொண்டால் இது போன்ற பிரச்சினை ஏற்படக்கூடும்.

கனியாத பழங்களை உட்கொள்வது பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும், இது தொண்டையில் எரிச்சல் மற்றும் வீக்கம், மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக குழந்தைகளில் இது சிக்கலாக மாறக்கூடும். சப்போட்டா பழத்தின் விதைகள் கடினமானவை என்பதால், தெரியாமல் அவற்றை உட்கொள்வதால் வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.

Views: - 892

0

0