சூரிய குளியல் செய்வதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்!!!

Author: Hemalatha Ramkumar
4 December 2022, 3:53 pm

உடலில் சூரிய ஒளியே படாமல் வீட்டிற்குள்ளேயே வாழ்ந்து வருபவர்களுக்கு பல விதமான சரும நோய்கள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆகவே தினமும் ஒரு சில நிமிடங்களாவது வெயிலில் உங்கள் சருமத்தை வெளிகாட்ட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

ஒரு வேலை நீங்கள் எந்த ஒரு வேலைக்கும் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லாத நபர் என்றால் வெளிநாட்டவர்களைப் போல இதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கி சூரிய குளியலில் ஈடுபடலாம். சூரிய குளியல் என்பது வெளிநாடுகளில் இருக்கும் ஒரு வழக்கம் ஆகும்.

சூரிய ஒளியின் நன்மைகளை புரிந்து கொண்ட வெளிநாட்டவர்களே இந்த சூரிய குளியல் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தினர். இத்தகைய சூரிய குளியல் எடுப்பவர்களுக்கு எந்த ஒரு சரும நோயும் வராது என்று கூறப்படுகிறது. உங்களுக்கு பளபளப்பான சருமம் வேண்டும் என்றால் அதற்கான ஃப்ரீ வழி சூரிய குளியல் ஆகும்.

சொறி போன்ற சில சரும நோய்களால் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் சில மணி நேரம் சூரிய குளியலில் ஈடுபட்டால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். இதற்கு சூரிய குளியல் எடுத்த பின் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் இறந்து விடும் என்று சொல்லப்படுகிறது. சருமத்திற்கு சூரிய ஒளி மிகவும் அவசியமானது. இதனால் சருமத்திற்கு ஏதேனும் பிரச்சினை வந்துவிடுமோ என்று பயப்படாதீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் அழகை மேம்படுத்த தினமும் சில மணி நேரம் சூரிய குளியலில் ஈடுபடுங்கள்.

  • nayanthara praises paranthu po movie in instagram வாழ்க்கைனா என்னனு தெரியணுமா? இந்த படத்தை பாருங்க- நயன்தாராவே தூக்கி கொண்டாடும் திரைப்படம்?