தீராத சளி இருமல் பிரச்சினைக்கெல்லாம் இதுதான் ஒரே தீர்வு | திப்பலி பற்றி தெரிஞ்சிக்கோங்க

12 May 2021, 7:18 am
health benefits of thippili
Quick Share

நம் பிறப்பு முதல் இறப்பு வரை சளி மற்றும் இருமல் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் பிரச்சினைகள் தான். அப்பப்போது ஒரு மாத்திரையை வாங்கி சாப்பிட்டோ அல்லது ஏதோ ஒரு டானிக் வாங்கி குடித்தோ அப்பாடா இப்போ கொஞ்சம் பரவாயில்லை என்று நாமும் அப்படியே கடந்து சென்றுவிடுவோம்.

ஆனால், எல்லோருக்குமே இது உடனே சரி ஆகிவிடும் என்று சொல்லுவிட முடியாது. ஏனென்றால் சிலருக்கு இது உள்ளேயே அப்படியே தேங்கி, மார்பு சளியாக கட்டிக்கொண்டு ஆஸ்துமாவாக மாறி பெரிய பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

முதலில் சளி பிடித்தால் நம்  உடலில் இருக்கும் அசுத்தங்கள் எல்லாம் வெளியேறும் ஒரு அறிகுறியாக கூட இருக்கலாம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். நமக்கு சளி பிடித்தால், அதை முற்றிலுமாக வெளியேற்றுதற்கான வழி என்ன என்று தான் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, மாத்திரையைப் போட்டுகொண்டு உடலிலேயே அடக்கி வைத்துக்கொண்டால் அப்போதுதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.

இந்த சளி, இருமல் மற்றும் இளைப்பு பிரச்சினைக்கெல்லாம் இயற்கையாகவே சிறந்த  தீர்வு இருக்கிறது. அது போன்ற ஒரு அற்புதமான மூலிகை தான் திப்பிலி. இந்த திப்பிலி நீண்ட நாளாக பிடித்துக்கொண்டு  பாடாய்படுத்தும் சளியைக் கூட விரட்டிவிடும்.

இந்த திப்பிலி பொதுவாக மலைப்பகுதிகளிலும் நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனுள் ஆவியாக கூடிய ஒரு எண்ணெய் இருக்கும். இது பல நோய்களைக் குணப்படுத்தும் அரிய மருந்தாக உள்ளது.

சரி, இப்போது இந்த திப்பிலியால் உண்டாகும் நன்மைகள் எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்.

  • சுவாச பிரச்சினை, வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் மற்றும் பித்தப்பை நோய்களை எல்லாம் குணமாக்கும் மகிமை கொண்டது திப்பிலி.
  • கொஞ்சம் திப்பிலியை வறுத்து, சிறிது தேனுடன் குழப்பி சாப்பிட்டு வந்தால், இருமல், தொண்டை புண், வீக்கம், பசியின்மை போன்ற பிரச்சினைகள் எல்லாம் குணமாகும்.
  • இந்த வறுத்த திப்பிலியை தேன் உடன் கலந்து தினசரி மூன்று வேளை சாப்பிட்டால் வயிற்று வலி, மலச்சிக்கல், நீர்க்கோர்த்து கொள்ளுதல் குணமாகும்.
  • திப்பிலியை வறுத்து பொடியாக்கி, அதே அளவு கடுக்காய் பொடியுடன் சிறிது தேனை கலந்து, மூன்று மாதங்களுக்கு தினசரி இரண்டு வேளை இலந்தை கொட்டை அளவில் சாப்பிட்டு வந்தால் நீண்டகாலமாக தீராத இளைப்பு பிரச்சினை குணமாகும்.
  • திப்பிலி பொடியை தேனுடன் கலந்து தினசரி இரண்டு முறை சாப்பிட்டால், தொண்டை புண், கோழைப்படுதல், குரல் கம்முதல் மற்றும் சுவையின்மை பிரச்சினையெல்லாம் குணமாகும்.
  • திப்பிலி பொடியை எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், குடலில் உள்ள புழுக்கள் நீங்கும்.
  • பாலூட்டும் தாய்மார்கள் திப்பிலி தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் இரத்தப்போக்கு மற்றும் காய்ச்சலிலிருந்து விடுபடலாம்.

Views: - 451

5

0