முதல் முறையாக உடலுறவு வைத்துக்கொள்ளும் முன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

13 July 2021, 5:52 pm
health tips for the first time you have sex
Quick Share

வாழ்க்கையில் நம் இன்ப துன்பங்களை பகிர்ந்துக்கொள்ள நமக்கென ஒரு துணை இருப்பது மிகவும் அவசியம். அதே நேரத்தில் தாம்பத்திய வாழக்கை என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. எனவே நமக்கு பாலியல் துணையாக ஒருவர் தேவை. அப்படி தாம்பத்திய வாழ்க்கையில் நுழையும் பலர் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற தெளிவில்லாமல் இருக்கின்றனர். எனவே முதல் முறையாக தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடுபவராக இருந்தால் என்னென்ன விஷயங்களை எல்லாம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

health tips for the first time you have sex

முதலில் உங்கள் துணையுடன் மனம் விட்டு பேச வேண்டும். எதற்குமே அவசரம் கூடாது. முடிந்தவரை உங்கள் மனதில் இருப்பதை வெட்ட வெளிச்சம் ஆக சொல்லிவிட வேண்டும். உங்கள் துணையின் விருப்பம் என்ன என்பதை தெரிந்துக்கொண்டு நடந்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் துணையின் ஆசைகளுக்கு மரியாதையை கொடுக்க வேண்டும். ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு புணர்தலில் ஈடுபடும்போது இருவருக்குமே நல்ல ஒரு அனுபவமும் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையும் உண்டாகும்.

health tips for the first time you have sex

பதற்றம் கூடாது. பதற்றம் இருந்தால் உங்கள் துணையிடம் கலந்துரையாடி, பதற்றம் நீங்கிய பிறகு கலவியில் ஈடுபட வேண்டும். உங்கள் துணைக்கு கலவியில் விருப்பம் உள்ளதா என்பதை அறிந்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

உங்கள் துணையைப் பாதுகாப்பாக உணரச் செய்து பின்னரே அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். எடுத்தவுடன் நேரடியாக கலவியில் ஈடுபட பறக்கக்கூடாது. முதலில் உங்கள் துணையுடன் பாலியல் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். உணர்ச்சி மிகும்போது கலவியில் ஈடுபட வேண்டும்.

health tips for the first time you have sex

ஆபாச தளங்கள், கதைகள் எல்லாம் படித்துவிட்டு அதை எல்லாம் உங்கள் துணையிடம் முயற்சிக்க நினைக்கக்கூடாது. தேவையில்லா சாகசங்களை எல்லாம் முயற்சி செய்து முதல் முறை கலவி அனுபவத்தை நீங்களே சிதைத்துக்கொள்ளள்க்கூடாது.

குழந்தை குறித்து முன்பே முடிவெடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தை வேண்டாம் என்றால் ஆணுறை, பெண்ணுறை போன்ற பாதுகாப்பு உனகரணங்களுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும். உறவில் ஈடுபட்டு பிறகு அதைபற்றி யோசித்து பலனொன்றும் இல்லை.

health tips for the first time you have sex

அதே போல மிகவும் முக்கியான விஷயம் என்றால் சுகாதாரம் தான். சுத்தமான இடங்களில் மட்டுமே கலவியில் ஈடுபட வேண்டும். அதே போல கலவியில் ஈடுபடும் இருவருமே தங்கள் பாலுறுப்புகளை  சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கலவியில் ஈடுபடுவதற்கு முன்பு தங்கள் பாலுறுப்புகளை நன்கு சுத்தப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம்.

Views: - 458

0

0