நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் ஸ்பெஷல் தேநீர்! எப்படி தயார் செய்யலாம்?

Author: Dhivagar
30 June 2021, 2:31 pm
herbal tea to increase the immunity
Quick Share

உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி என்பது மிகவும் முக்கியம். அதுவும் குறிப்பாக இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை முடியும் தருவாயில் நம் உடலை நோயெதிப்பு ஆற்றலுடன் வைத்திருந்து மூன்றாம் அலையிலிருந்து  நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இயற்கை முறையில் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு ஸ்பெஷலான மூலிகைத் தேநீர் போட்டுக் குடிக்கலாம். இந்த ஸ்பெஷல் மூலிகைத் தேநீர் போட நமக்கு வேண்டியதெல்லாம் பல அற்புத நன்மைகள் கொண்ட துளசி, இஞ்சி, மஞ்சள் ஆகிய மூன்றும் தான். ஆயுர்வேத முறைப்படி, நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடவும், சீராக செரிமான செயல்படவும் மூலிகைத் தேநீர் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவதால் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வறட்சி, போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இந்த துளசி, மஞ்சள், இஞ்சி ஆகியவை சேர்க்கப்பட்ட மூலிகைத் தேநீரை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சரி இப்போது இந்த தேநீர் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

இதற்கு தேவையான பொருட்கள் தண்ணீர் 4 கப், அரை கைப்பிடி துளசி இலைகள், ஒரு சிறு துண்டு இஞ்சி, மஞ்சள் கால் டீஸ்பூன், சுவைக்கேற்ப தேன்.

இந்த பொருட்களை எல்லாம் முதலில் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இஞ்சியின் தோலைச் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்க கொள்ளலாம் அப்படி இல்லையென்றால் இஞ்சியை நன்றாக அரைத்து சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளலாம். 

ஒரு சிறிய பாத்திரத்தை அடுத்து அடுப்பில் வையுங்கள். அதில் நன்கு கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். நன்கு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு, மோதி அடங்கியதும் துளசி, இஞ்சி சாறு, அல்லது அரைத்த இஞ்சி விழுது ஆகியற்றை சேர்க்கவும். லேசாக கொதி வரும் நிலையில் அதை அடுப்பில் இருந்து இறக்கி மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். அதன் பிறகு தேநீரை வடிகட்டி தேவைக்கு  ஏற்ப தேன் சேர்த்து குடிக்கலாம்.

இந்த தேநீரை தினமும் மூன்று முதல் நான்கு முறை நீங்கள் குடிக்கலாம். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒரு தேநீர். குளிர்காலத்தில் இது மிகவும் நல்லது. இந்த மூலிகை தேநீர் சூடாக இருக்கும்போது அல்லது அடுப்பில் இருக்கும்போது தேன் கலக்கக்கூடாது. இந்த மூலிகை தேநீர் என்றில்லை எதுவுமே சூடாக இருக்கும்போது தேன் சேர்க்கக்கூடாது. தேனை சூடுபடுத்தவும் கூடாது.

  • இந்த தேநீர் குடித்தால் பித்தம் கட்டுக்குள் இருக்கும். 
  • தொண்டை வறட்சி, காய்ச்சல், சளி, இருமல், சுவாச பிரச்சினைகளுக்கு இந்த மூலிகை தேநீர் நல்ல நிவாரணம் கொடுக்கும்.
  • இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, பூஞ்சை காளான் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. 
  • மஞ்சளில் இருக்கும் குர்குமின் சாதாரணமாக ஏற்படும் காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை அனைத்துக்கும் தீர்வு தர வல்லது.
  • இஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைத்து காணப்படுவதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏற்ற பானம் இது. 
  • ஆரோக்கியம் குறையாமல் உடல் நலனுடன் இருக்க இந்த தேநீரை எல்லோரும் பருகி பயனடையுங்கள்.

Views: - 326

0

0