வாட்டி வதைக்கும் இருமலில் இருந்து விடுபட உதவும் ஐந்து எளிய வீட்டு வைத்தியங்கள்!!!

21 April 2021, 4:45 pm
Quick Share

கிருமிகள் நம்  தொண்டையில் நுழையும் போது இருமல் ஏற்படுகிறது. காற்றுப்பாதைகளை சுத்தம் செய்து மற்றும்  எரிச்சலிலிருந்து விடுபடவும் உதவுவதால் இருமல் உண்மையில் நல்லது. இருப்பினும், தொடர்ச்சியான இருமல் உங்களை இரவு முழுவதும் தூங்க விடாமல்  செய்யலாம் மற்றும் வேலைகளை  சீர்குலைக்கும். 

பொதுவாக, இருமல் எந்த ஒரு வைத்தியமும் இல்லாமல் தானாகவே போய்விடும். ஆனால், அவ்வாறு இல்லையென்றால், அதை குணப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இருமலை  குணப்படுத்த பெரும்பாலும் வீட்டு வைத்தியமே சிறந்தது. ஏனெனில் இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே நாம் தினசரி பயன்படுத்தும்  சமையலறை பொருட்களைக் வைத்து  இருமலுக்கு சிகிச்சையளிப்பது எப்படி என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். 

1. நீராவி: 

நீராவியை தவறாமல் சுவாசிப்பது உங்கள் காற்றுப்பாதையை சுத்தம் செய்ய உதவும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். இப்போது உங்கள் தலைக்கு மேல் ஒரு துண்டை எடுத்து போர்த்திக்  கொள்ளுங்கள். நீராவியை நன்றாக சுவாசியுங்கள். 

2. உப்பு நீர்: 

உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டையில் உள்ள  சளியையும் அகற்றி அதனை சுத்தம் செய்ய உதவும். இருமல் குணமடைய தினமும்  சூடான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும்

3. சாக்லேட்: 

நம்ப முடியவில்லையா… ஆமாம், உண்மை தான். சாக்லேட் இருமலுக்கு நன்மை பயக்கும். சாக்லேட்டுகளில் உள்ள கோகோ இருமலை அடக்க உதவும் மற்றும் இது நரம்புகளை பாதுகாக்கிறது.

4. தேன்:

தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் தொண்டை எரிச்சலிலிருந்து பாதுகாக்க தேனை ஒரு மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம். 

5. யூகலிப்டஸ் எண்ணெய்:

இருமல் மற்றும் நெரிசலைப் போக்க இந்த எண்ணெயை மார்பில் தேய்க்கலாம். இது காற்றுப்பாதைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து நீராவியாகவும் உள்ளிழுக்கலாம்.

Views: - 576

0

0