அடக்க முடியாத அளவிற்கு கோபத்தை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் இது தான்!!!

17 April 2021, 6:30 pm
Quick Share

விஷயங்கள் தவறாக நடக்கும்போது அல்லது ஏதேனும் மோசமான காரியங்கள் நடக்கும்போது நாம் அனைவரும் கோபப்படுகிறோம். கோபம், எதிர்மறை உணர்ச்சியாகக் கருதப்பட்டாலும், அது உண்மை அல்ல. இது உங்களை வெளிப்படுத்தவும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைச் சமாளிக்கவும் உதவுகிறது. ஆனால் உங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் அளவிற்கு கோபம் மாறும் போது அது தவறானது மற்றும் சிக்கலானது.

பெரும்பாலும் கோபத்தில் இருக்கும்போது, ​​நாம்  மிகவும் விலைமதிப்பற்ற உறவுகளை இழந்துவிடக்கூடும். கோபம் காரணமாக மற்றவர்களை  புண்படுத்தும் வார்த்தைகளை நாம் கூற நேரிடும். இத்தகைய சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம். உங்கள் கோபத்தை திறம்பட கட்டுப்படுத்த இந்த 5 வழிகளைப் பின்பற்றுங்கள்.

1. மூச்சு விடுங்கள்:

இது ஒரு நகைச்சுவை போலத் தோன்றலாம். ஆனால் ஒரு கோபத்தின்  நடுவில் ஒரு ஆழ்ந்த மூச்சை விடுவது உண்மையில் அமைதியாக இருக்கவும், உங்களுக்கு கோபம் உண்டானதற்கான காரணத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்யவும் உதவும்.

2. அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற  எண்ணத்தை கைவிடவும்:

மக்கள் கோபமாக இருக்கும்போது உடல் ரீதியாக ஆக்ரோஷமாகப் மாறுகிறார்கள். உங்கள் கோபத்தை விடுவிப்பதற்காக பொருட்களை வீசவோ அல்லது உடைக்கவோ நீங்கள் ஆசைப்படலாம். தூண்டுதலை எதிர்த்து, நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

3. எண்களை எண்ணுங்கள்:

எண்களை பின்னோக்கி எண்ணுவது உண்மையில் வேலை செய்யும். நீங்கள் கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்று நீங்கள் உணரும் தருணம், உங்களைத் திசைதிருப்ப எண்களை பின்னோக்கி எண்ணத் தொடங்குங்கள்.

4. ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும்:

நீங்கள் கோபமாக இருக்கும்போது, ​​மற்ற நபரை அது எவ்வளவு புண்படுத்தினாலும் நீங்கள் உணர்ந்ததை நீங்கள் சொல்லியே ஆக வேண்டும் என்று  விரும்பலாம். இதனை கூறியதற்காக பின்னர் வருத்தப்பட வேண்டிய ஒன்றைச் சொல்வதை நிறுத்துங்கள்.

5. நகைச்சுவையில் ஈடுபடுங்கள்:

விஷயங்கள் மோசமடையத் தொடங்கும் தருணத்தில், சூழ்நிலையில் நகைச்சுவையை சேர்க்க முயற்சிக்கவும்.

Views: - 85

1

0