வீட்டு வைத்திய முறையில் முதுகுவலியை தீர்க்க எளிமையான வழிமுறைகள் உங்களுக்காக !

15 February 2020, 6:02 pm
back-pain updatenews360
Quick Share

பெரும்பான்மையாக   அதிகம் வேலை செய்யும்   பெண்கள் மற்றும் பயணம் செய்யும்  பெண்களுக்கு முதுகு வலி இருக்கும். இதற்காக   வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய வழிமுறைகள்   உள்ளன. அதை இங்கு பார்க்கலாம்.

  • தேங்காய்   எண்ணெய்யுடன்   கற்பூரத்தை சேர்த்து  காய வைக்க வேண்டும்.பின்பு அதை நன்கு ஆறவைத்து முதுகுக்கு தேய்த்துக் கொள்ளலாம். இதை தினமும் நீங்கள் வீட்டிலே செய்து வந்தால் முது வலி குறைய வாய்ப்புள்ளது.
  • மூலிகை   எண்ணையை பயன்படுத்தி   மசாஜ் செய்வது உங்கள்   முதுகுக்கு நன்மை பயக்கும்.  அதுமட்டுமில்லாமல் இதை வாரத்திற்கு   இருமுறை செய்தால் உங்கள் உடல் உற்சாகமாக  இருக்க செய்யும்.
back-pain updatenews360

இஞ்சியை   சேர்த்து தேநீரை   கொதிக்க வைத்து குடிக்கலாம். இதை   தினமும் குடித்தால் முதுகு பிடிப்புகள்   காணாமல் போய்விடும்.அது மட்டுமில்லாமல்   உங்கள் இடுப்பு மற்றும்  முதுகு வலியை இது குறைக்கும் வல்லமை   பெற்றது.

back-pain updatenews360

கொஞ்சம்  சூடான பாலில்   மஞ்சள் தூள் மற்றும்  தேன் சேர்த்து கலக்கிக்  கொள்ளலாம். பின்பு இதை மறுபடியும்   சூடாக்கி குடிக்கலாம். இதை தினமும் செய்து வந்தால்   முதுகு வலி காணாமல் போய் விடும். அதை தவிர உடல்வலி   மற்றும் தொண்டை வலி சரியாகிவிடும்.

oil-in-spoon back-pain updatenews360

நீங்கள்  குளிக்க செல்வதற்கு  முன் கடுகு எண்ணையை   பயன்படுத்தி, உங்கள் முதுகை   மசாஜ் செய்யலாம். இதை செய்துவிட்டு   15 நிமிடம் கழித்து குளிக்கலாம். இப்படி  செய்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

back-pain updatenews360

நீங்கள்   தொலைக்காட்சி  பார்க்கும்போது   ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும்  போது சுடுநீர் பையை உங்கள் முதுகு   புறத்தில் வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்தால் கொஞ்சம் முதுகு   வலி குறைய வாய்ப்புள்ளது.

Leave a Reply