குழந்தைகளின் சளியைப் போக்கும் கைவைத்திய முறைகள் ! இனிமே கவலையே இல்லை!!

4 September 2020, 11:11 am
Home remedies for cold and flu in Kids
Quick Share

இந்த மழைக்காலம் பனிக்காலம் வந்தாலே பெற்றோர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது குழ்நதைகளுக்கு ஏற்படும் சளி பிரச்சினை தான். இந்த குழந்தைகளுக்கு சளி பிடித்துக்கொண்டால் பாவம் அது அவர்களை பாடாய் படுத்திவிடும். ஆனால், பெற்றோர்கள் இதை பற்றி இனி கவலைப்பட வேண்டாம். இதற்கு அருமையான எளிமையான சில இயற்கை வைத்தியங்கள் இருக்குங்க. அதைப் பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.

  • முருங்கைக் இலையையும் உப்பையும் நன்றாக கசக்கி 3 ஸ்பூன் அளவு சாறு எடுத்து குழ்நதைகளுக்கு கொடுத்தால் கட்டிக்கொண்டிருக்கும் சளி எல்லாம் வாந்தியாக வெளியே வந்துவிடும்.
  • குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், குப்பைமேனி இலையையும், உப்பையும் கசக்கி, அந்தச் சாற்றை 5 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் கொடுத்தால் சளி குணமாகிவிடும்.
  • சிறு சுக்குத் துண்டு நன்றாக பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட உடலிலுள்ள சளி விரைவில் வெளியேறிவிடும்.
  • எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் சிறிது தேன் சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரைந்து போகும். 
  • அதே போல, மிளகுத் தூளையும், மஞ்சளையும் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி மாயமாய் கரைந்து போகும்.
  • நெல்லிக்காய் சாற்றில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினை எல்லாம் நீங்கும். 
  • புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் நன்றாக மென்று சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் எல்லாம் காணாமல் போகும்.
  • ஏலக்காயை நன்றாக பொடி செய்து நெய்யில் கலந்து காலை, மாலை  இருவேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட தீரா மார்புச்சளி பிரச்சினைக்கூட தீர்ந்துப்போகும்.
  • பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும். 
  • 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை காணாமல் போகும்.

இது போன்ற இயற்கை வைத்தியத்தை தெரிந்து  வைத்துக்கொண்டு, உங்கள் குழந்தைகளை சளி போன்ற பிரச்சினை நெருங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அக்கறையுடன் Updatenews360. 

Views: - 0

0

0