எப்பேற்பட்ட நெஞ்சு சளியையும் ஒரே நாளில் போக்கிவிடும் வீட்டில் செய்யக்கூடிய இயற்கை வைத்தியம்!!!

24 November 2020, 7:47 pm
Quick Share

ஒரு சிலருக்கு வானிலை கொஞ்சம் மாறினாலோ அல்லது புது தண்ணீர் எதாவது குடித்தாலோ உடனடியாக சளி பிடித்துவிடும். இன்னும் ஒரு சிலருக்கு நெஞ்சு சளி பிடித்து கொண்டு வாட்டும். இரவு படுக்கும் போதெல்லாம் வறட்டு இருமல் காரணமாக தூங்க கூட முடியாது. இத்தகைய தொந்தரவு தரும் சளி மற்றும் இருமலை ஒரே நாளில் போக்க கூடிய ஒரு அற்புதமான வீட்டு வைத்தியத்தை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த இயற்கை வைத்தியத்தால் உங்களுக்கு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே இதனை நீங்கள் தைரியமாக செய்து வரலாம். 

இந்த சளி மருந்து செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். பாத்திரத்தில் 1 1/2 கிளாஸ் அளவு குடிநீரை ஊற்றி கொள்ளுங்கள். இப்போது ஒரு வெற்றிலையை எடுத்து அதன் காம்பை அகற்றிய பிறகு தூர எறிந்து விட்டு, வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக கைகளாலே கிள்ளி கொள்ளவும். 

வெற்றிலை துண்டுகளை தண்ணீரில் போட்டு கொள்ளவும். அடுத்து ஒரு துண்டு இஞ்சியை இடித்து அதையும் சேர்த்து கொள்ளலாம். பிறகு 15 லிருந்து 20 மிளகு மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். இஞ்சி, மிளகு மற்றும் சீரகத்தை தனித்தனியாக உரலில் இடித்த பிறகு தான் சேர்க்க வேண்டும். 

கடைசியாக 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்களிடம் வர மல்லி இருந்தால் மல்லித்தூளுக்கு பதிலாக அதனை இடித்து சேர்த்து கொள்ளலாம். அதே போல கடையில் கொத்தமல்லி தூளை பயன்படுத்த வேண்டாம். இப்போது தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்தாயிற்று. 

நாம் முதலில் ஊற்றிய 1 1/2 டம்ளர் தண்ணீர் 3/4 டம்ளர் தண்ணீராக குறையும் வரை கொதிகட்டும். அதாவது நாம் சேர்த்த பொருட்களின் சாறும்  தண்ணீரில் இறங்கி தண்ணீர் பாதியாக குறைய வேண்டும். அவ்வளவு தான்… கஷாயம் தயாராக உள்ளது. இதனை வடிகட்டி ஒரு டம்ளருக்கு மாற்றி ஓரளவு ஆறிய பின் பருக வேண்டியது தான். 

காலை வெறும் வயிற்றில் இதனை நீங்கள் குடித்தால், நீங்கள் மலம் கழிக்கும் போது மலம் வழியாக அனைத்து சளியும் வெளியேறி விடும். இரவு தூங்கும் முன்பு குடித்தால் காலையில் நீங்கள் மலம் கழிக்கும் போது சளி அதன் வழியாக வெளியேறி விடும். இந்த 3/4 டம்ளர் தண்ணீர் பெரியவர்களுக்கு சரியான அளவு. இதையே சிறியவர்களுக்கு கொடுக்கும் அளவை பாதியாக குறைத்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு இரண்டு சங்கடை ஊற்றினால் போதும். மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இந்த மருந்தை நீங்கள் கொடுக்க வேண்டும். இந்த வைத்தியத்தை நீங்களும் முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள். 

Views: - 0

0

0