இந்த 3 பொருள் போதும் 1 மாதத்தில் நீங்க அவ்ளோ அழகா மாறிடலாம்!

7 May 2021, 8:06 am
home-remedies-to-get-soft-skin-in-a-month-of-time-070521
Quick Share

தான் பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தாங்க இருக்காது. எல்லோருக்குமே பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க தான் செய்கிறது. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நம் சருமம் தானே மாற தொடங்கும். இது இயற்கைதான். ஆனால், வயது கூட கூட பலரின் சருமங்களில் மேடு பள்ளங்களுடன் சருமம் பார்க்கவே நன்றாக இல்லாமல் ஆகிவிடும். உங்களுக்கும் இது போன்ற பிரச்சினை இருந்தால் நீங்கள் இதற்கு கவலைப்படவோ அதிகம் செலவு செய்யவோ வேண்டிய தேவையில்லை. எளிமையான சில வீட்டு வைத்தியம் முறைகள் மூலமே இதை சரிசெய்து விடலாம். ஆனால் அதை எப்படி செய்யுனும்? தெரிஞ்சுக்கலாம் வாங்க 

நம் சருமத்தில் சின்ன சின்ன துளைகள் இயற்கையாகவே இருக்கும். அப்படி இருக்கும் துளைகளில் தினசரி சேரும் அழுக்கு பருக்களை ஏற்படுத்தும். அதன் பிறகு அதன் வடுக்கள் மாறாமல் சருமத்தில் பள்ளங்களையும் சருமத்தையே மோசமாகவும் மாற்றிவிடுகின்றன. இப்படி தான் நாம் வெளியில் சென்று வரும்போது அழுக்கு ஒவ்வொரு துளைகளிலும் நுழைந்து சருமத்தின் அழகைக் கெடுத்துவிடுகிறது.

ஆனால், முன்னெச்சரிக்கையாக எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி வெளியே சென்று வந்தாலோ, அதிக தூசி இருக்கும் இடங்களுக்கு சென்று வந்தாலோ முகத்தை நன்றாக கழுவ வேண்டும். பயத்தம் மாவை அரைத்து, முகம் மற்றும் உடல் முழுவதும் சோப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக பயன்படுத்தலாம்.

அப்படி இல்லையென்றால், சருமத்தில் உள்ள வடுக்கள் மற்றும் பள்ளங்களை அகற்றி பளபளப்பான மேனியைப் பெற கொஞ்சம் வேப்ப இலைகளைப் பயன்படுத்தலாம். அதை நசுக்கி 2 தேக்கரண்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் கற்றாழையில் இருந்து ஜெல் போன்ற பகுதியை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். இந்த கற்றாழையில்  தேய்த்தால் வரும் பசை போன்ற திரவம் முகத்தில் உள்ள பிரச்சினைகளையும் நீக்கும் திறன் கொண்டது.

அது மட்டுமில்லாமல், அப்படி எடுக்கப்பட்ட கற்றாழை சோற்றுடன் வேம்பு சாறு கொஞ்சம் எடுத்துக்கொண்டு சுத்தமான மஞ்சள் பொடியுடன் கலந்து பேஸ்ட் போன்று செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகத்தில் நன்கு தடவிக்கொள்ளுங்கள். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி உலர விடவும். அரை மணி நேரம் கழித்து, சுத்தமான சருமத்தைப் பெற முகத்தை குளிர்ந்த நீரில் சருமத்தைக் கழுவ வேண்டும். 

குறைந்தது ஒரு மாதத்திற்கு தினமும் இதைச் செய்தால், உங்கள் முகத்தில் அதுபோன்று வடுக்கள் இருந்தால் ஒரு மாதத்திற்கு பிறகு அந்த வடுக்கள் முகத்தில் இருந்ததா என்பதே தெரியாமல் மறைந்துவிடும். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள், கறைகள் அல்லது மருக்கள் போன்ற பிரச்சினை எதுவுமே இருக்காது. சரியாக முப்பது நாட்களுக்கு இதைச் செய்யுங்கள், உங்கள் முகம் பளிச்சென்று ஆகி மென்மையாக பிரகாசிப்பதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.

Views: - 316

1

0