பெண்கள் ஸ்பெஷல்: PCOS பிரச்சினைக்கு முழு காரணமான ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
26 September 2024, 6:45 pm

உடலில் ஹார்மோன்கள் சீராக இல்லாவிட்டால் அதனால் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும். ஹார்மோன் சமநிலை என்பது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஹார்மோன் சமநிலையை அடைவதற்கு உதவும் ஒரு சில இயற்கை வைத்தியங்களை இப்போது பார்க்கலாம்.

நீங்கள் சாப்பிடும் எந்த ஒரு பொருளும் உங்களுடைய ஹார்மோன்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் சாப்பிடுவதை கைவிடுங்கள். அதற்கு பதிலாக முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடவும். ப்ராக்கோலி மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகள் ஈஸ்ட்ரோஜன் அளவுகளை சீராக்க உதவும். ஆரோக்கியமான குடல் பாக்டீரியா இருப்பது ஹார்மோன் சீராக இருப்பதற்கு மிகவும் அத்தியாவசியம். எனவே ப்ரீபயாடிக் மற்றும் ப்ரோபயாடிக் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஹார்மோன் சமநிலையின்மையை குறிப்பதற்கான மிக முக்கியமான ஒரு அறிகுறி. எனவே அதிக சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

போதுமான அளவு தூக்கம் முற்றிலும் முக்கியமானது. இது உங்கள் உடலையும், மனதையும் மீட்டமைக்க உதவுகிறது. உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டால் உங்கள் ஹார்மோன் சமநிலை சீர்குலைக்கப்படும்.

நாள்பட்ட மன அழுத்தம் தூக்கம் மற்றும் ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம். எனவே யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சி போன்ற நுட்பங்களை பின்பற்றி மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

உடல் செயல்பாடு என்பது உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உங்களுடைய மன நலன் மற்றும் ஹார்மோன் சமநிலைக்கும் அவசியம். எனவே தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை உறுதி செய்யுங்கள். அவ்வாறு செய்து உங்கள் உடல் எடையை சீராக பராமரிப்பது அவசியம். உடற்பயிற்சி என்பது ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்வது மட்டுமல்ல ஆடல், நீச்சல் அல்லது உங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாடுவது போன்ற எதில் வேண்டுமானாலும் நீங்கள் ஈடுபடலாம்.

ஹார்மோன் சமநிலையை உறுதி செய்வதற்கு அஸ்வகந்தா, லாவண்டர் போன்ற மூலிகைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் இந்த மூலிகைகளை பயன்படுத்துவதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையை பெற மறக்காதீர்கள்.

இந்த இயற்கையான வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலமாக உங்கள் ஹார்மோன்கள் சமநிலையாக இருப்பதை நீங்கள் உறுதி செய்யலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!