நாட்டுக்கோழி மிளகுக்கறி செய்வது எப்படி? சிம்பிளா 2 நிமிட டிப்ஸ்

13 February 2020, 5:37 pm
naatukoli milagu kari
Quick Share

நாட்டுக்கோழி  மிளகுக்கறி எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய வித்தியாசமான மற்றும் சுவையான உணவு பொருளாகும். இது சமைக்க மிகவும் எளிதானது மற்றும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று. இந்த மிளகு கோழிக்கறியை எப்போதும் சூடாக வேகவைத்து வாழையிலையில் பரிமாற வேண்டும். அப்போதுதான் அதன் முழு சுவையையும் உணர முடியும். சரி, இப்போது சிம்பிளாக நாட்டுக்கோழி மிளகுக்கறி எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நாட்டுக்கோழி மிளகுக்கறி செய்ய தேவையான பொருட்கள்:

* நாட்டுக்கோழிக்கறி: 700 கிராம்

* தயிர்: 1 கப் (தண்ணீர் வடிகட்டியது)

* வெள்ளை மிளகு தூள்: 2 தேக்கரண்டி முழுதாக

* கடலை எண்ணெய்: சிறிதளவு (உங்களுக்கு விருப்பமான எண்ணெய்)

* இஞ்சி பூண்டு விழுது: ஒவ்வொன்றும் 1 தேக்கரண்டி

* வெங்காயம்: 1 பெரிய வெங்காயம் 

* கரம் மசாலா: 3-4 தேக்கரண்டி (சுவைக்கேற்ப)

* தேவைக்கேற்ப உப்பு 

நாட்டுக்கோழி மிளகுக்கறி செய்யும் வழிமுறைகள்

  • நாட்டுக்கோழிக்கறியை சுத்தமான நீரில் நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டவும். 
  • 1 மணி நேரம் அதை அப்படியே குளிரவிடவும். வெங்காயத்தை எடுத்து சிறு சிறு தூளாக வெட்டிக்கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  • கடுகு, கறிவேப்பிலை, மற்றும் தூளாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து  பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 
  • அதனுடன் தயிர், மிளகு, கடலை எண்ணெய், இஞ்சி பூண்டு விழுதுடன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வத்தக்கவும்.
  • நன்றாக வதங்கிய பிறகு நாட்டுக்கோழிகறியை 1/2 மணி நேரம் வரை வேக வைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளவும். 
  • நன்றாக கோழிக்கறி வெந்த பிறகு, சிறிது மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்குங்கள்.
  • மிளகு நன்றாக கறியுடன் கலந்தபிறகு சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை போட்டு அடுப்பிலிருந்து கீழிறக்கவும். அவ்வளவுதான் சூடான சுவையான நாட்டுக்கோழி மிளகுக்கறி தயார்.

மிளகு கோழிக்கறி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான மற்றும் சுவையான உணவாகும். இது சமைக்க மிகவும் எளிதானது. இந்த சுவையான உணவை சூடான இட்லி அல்லது சூடான வெள்ளை சாதத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள். இன்றே நீங்களும் உங்கள் வீடுகளில் இதை செய்து பார்த்து எப்படி இருந்தது என்று கமெண்ட் செய்யுங்கள்.

Leave a Reply