கறிக்குழம்பு என்னங்க கறிக்குழம்பு…. இந்த சைவ ரெசிபியை இப்படி செஞ்சு பாருங்க! இதை விடவே மாட்டீங்க

Author: Dhivagar
23 July 2021, 6:14 pm
how to cook thoiya keerai kichadi in tamil
Quick Share

ஆன்லைன் முதல் ஆஃப்லைனில் இருக்கும் கடைகள் வரை எல்லாமே பிரியாணி, சிக்கன், மட்டன் என அசைவ உணவுகளாகவே இருக்கிறது. ஆனால், உண்மையில் சைவ உணவுகளின் உண்மையான ருசியை அறிந்தால் நீங்கள் அசைவம் பக்கமே போக மாட்டீங்க. எல்லோருக்குமே பொதுவா கிச்சடி பிடிக்கும். ஆனா இது நார்மல் ரவை கிச்சடி இல்லங்க, இது வேற மாதிரியான ருசியான கீரை கிச்சடி. நிறைய பேர் பயறு வகைகளை கொண்டு கிச்சடி செய்வாங்க, மற்றவர்கள்  நிறைய காய்கறிகளை வைத்து செய்வாங்க, ஆனா நம்ம இன்னிக்கு தொய்யக்கீரை கிச்சடி செய்யப்போறோம்.. 

தேவையான பொருட்கள்:

  • தொய்யக்கீரை- 20 கிராம்
  • அரிசி- 20 கிராம்
  • துவரம் பருப்பு- 5 கிராம்
  • பட்டாணி- 5 கிராம் 
  • ப்ரோக்கோலி- 5 கிராம்
  • வெங்காயம்- 10 கிராம்
  • பச்சை மிளகாய்- 1
  • நெய்- 1 தேக்கரண்டி
  • பூண்டு- ½ தேக்கரண்டி
  • சீரகம்- ½ தேக்கரண்டி
  • பெருங்காயம்- ஒரு சிட்டிகை
  • மிளகாய் தூள்- ஒரு சிட்டிகை
  • உப்பு- சுவைக்கு ஏற்ப 
  • மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

செய்முறை:

  • காய்கறிகள், அரிசி, பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக கழுவி வைக்கவும்.
  • பிரஷர் குக்கரை எடுத்து அரிசி, பருப்பு, ப்ரோக்கோலி, பட்டாணி, மஞ்சள், ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 1-2 கப் தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் போட்டு  சமைக்கவும்.
  • ஒரு தனி வாணலியில், தொய்யக்கீரைகீரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் கீரையை குளிர்ந்த நீருக்கு மாற்றவும். சிறிது நேரம் கழித்து, கீரையை கடைந்து பேஸ்டாக மாற்றவும்.
  • பின்னர் ஒரு வாணலியை எடுத்து, சிறிது நெய் / எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து, அவை நிறம் மாறும் வரை சமைக்கவும்.
  • பின்னர் தொய்யக்கீரைகீரை விழுது சேர்த்து சமைக்கவும்.
  • இப்போது வேக வைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மசாலாப் பொருட்கள் அரிசி மற்றும் பருப்போடு சேர்ந்து வருமாறு நன்கு கலக்கவும். 5 – 7 நிமிடங்கள் வரை  சமைத்து அடுப்பை அணைத்து விடலாம்.
  • இதற்கு காரசாரமான சட்னி அட்டகாசமான காம்பினேஷன்.

சரிங்க செஞ்சு சாப்பிடு டேஸ்டா இருக்கும்னு சொல்றீங்க, ஆனால் இதனால என்ன நல்லது?

  • தொய்யக்கீரையின் மூலமாக  வைட்டமின் A, வைட்டமின் K, ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை கிடைக்கும். இது இரத்த உறைதலைப் போக்க உதவுகிறது. நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் திசு வளர்ச்சிக்கு அவசியம். 
  • இந்த செய்முறையானது எடை இழப்பை ஊக்குவிப்பதற்கும் உங்கள் உடலை நச்சுத்தன்மை அற்றதாக மாற்றுவதற்கும் அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது. 
  • சிறிய அளவிலான நெய் மேக்ரோநியூட்ரியன்களின் சிறந்த மூலமாகும். 
  • இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சிறந்த உணவு.

Views: - 367

1

0